பக்கம்:பவழபஸ்பம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தொகுப்பை, 'பவழபஸ்பம்' என்னும் தலைப்பில் தவழவிட்டிருக்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'சிறுகதை' என்பது சுவீகாரக் குழந்தைதான். அதுவும் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட குழந்தை அது.

அந்தக் குழந்தையை அமரர் அண்ணா அவர்கள், தம் கரத்தில் ஏந்தித் தவழவிட்டிருக்கும் பாங்கை இதில் நீங்கள் பரவலாகக் காணலாம். அந்தக் குழந்தையின் மூலமாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் விழிப்பை மட்டுமா, நல்ல வெளிச்சத்தையும் தரக்கூடிய மருந்தாகும்.

அந்தக் சிறப்புள்ள—பேரறிஞர் அண்ணா அவர்களின் உயிர்த்துடிப்புள்ள கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி இராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதய பூர்வமான நன்றி.

—பூம்புகார் பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/5&oldid=1638384" இலிருந்து மீள்விக்கப்பட்டது