பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


சமையல்காரரை நோக்கி "நாய்க்கு ஏதாவது தின்னக் கொடுத்தீர்களா?” என்று கேட்டேன்.

"கொடுத்தேன்; அது தின்னவில்லை! தட்டில் வைத்தது அப்படியே இருக்கிறது!"என்றார் சமையால்காரர்.

நான் திரும்பிப் பார்த்தேன். நாயின் எதிரில் இருந்த தட்டில், பிசுக்கோத்துகள், சுட்ட உப்புக் கண்டத் துண்டுகள் வைத்தது வைத்தபடியிருந்தன. நாய் வாசற் கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தது.

“ஒரு குவளை பால் கொண்டு வாருங்கள்” என்றேன். சமையற்காரர் கொண்டு வந்தார். தட்டில் ஊற்றி அதன் வாயருகில் தூக்கிப் பிடித்தேன். அதன் நாக்கு வெளியில் வரவேயில்லை.

"சிவாஜி! சிவாஜி! பால்குடி” என்றேன். அது திரும்பிப் பார்க்கவேயில்லை.

மூன்று நாட்கள். அது படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவேயில்லை. எதையும் தின்ன வில்லை. கூப்பிட்ட குரலைக் கவனிக்கவேயில்லை,