பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


அவருக்கு எண்பதாவது வயது நடக்கும் போது ஒரு நாள் காய்ச்சல் என்று படுக்க நேர்ந்தது. மூன்று நாட்களில் அந்தக் காய்ச்சலும் பறந்துவிட்டது. மிகுதியாக உழைத்து, அளவோடு உண்டு, நல்வழியில் நடந்து வருபவர்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை, வந்தாலும் எளிதாக மறைந்து போய்விடும்.

காய்ச்சலாகப் படுத்திருந்த அந்த மூன்று நாட்களில் அவருக்கு ஒரு பயம் தோன்றியது.

தனக்கு வயதாகிவிட்டது. இனி நெடு நாட்கள் உயிருடன் இருக்க முடியாது.எனவே, அதற்குமுன் தன் ஒரே மகனைப் பொறுப்பும் தகுதியும் உள்ளவனாக ஆக்கிவிட வேண்டும் என்று எண்ணினார்.

காய்ச்சல் நோயிலிருந்து விடுபட்டு, உடல் நலம் அடைந்த பிறகு ஒரு நாள் அவர் தன் மகனைக் கூப்பிட்டார்.

“அன்பு மகனே! எனக்கு வயது மிகுந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள்தான் நான் உயிரோடு இருப்பேன். அதற்குள் நீ