பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60


“ஆ|ஆ|ஆ! என் காலில் சிக்கிக் கொண்டிருக்கும் நீ, இன்னும் ஒரு நொடியில் என் பசியைத் தீர்க்கப் போகும் நீ, எனக்கு உதவி செய்கிறாயா? வேடிக்கைதான்!" என்று பெரிதாகச் சிரித்தது முள்ளம் பன்றி.

“சும்மா சிரிக்காதே! நான் சொல்லுவதைக் கேள்! நீ என் இசையைப் பாராட்டினாய். உன் கையில் அகப்பட்ட நான் எப்படியும் சாகப் போகிறேன். என் சாவு சாதாரணச் சாவாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். என் இசையைப் பாராட்டிய உனக்கு நான் சுவையான உணவாகிச் சாக விரும்புகிறேன். நீ இவ்வளவு நாளும் பூச்சிகளைப் பிடித்து அப்படியே கடித்துத் தின்றிருக்கிறாய்! அதில் சுவையுமில்லை; இன்பமும் இல்லை. மனிதர்கள் எதையும் வறுத்துத்தான் சாப்பிடுவார்கள். அதுபோல் நீயும் என்னை வறுத்துச் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றது பொன் வண்டு.

“அசட்டுப் பொன்வண்டே! நான் எப்படி உன்னை வறுத்துச் சாப்பிட முடியும்? எவனாவது மனிதனிடம் சென்று உன்னை