பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செல்வ மகன்




நீண்ட நெடுங் காலத்திற்கு முன் குன்றக்குடியில் சங்கரன் என்ற பெரியவர் இருந்தார். சங்கரன் பெரிய பணக்காரர். அவருக்கு வீடு, நிலம், தோட்டம், சொத்து எல்லாம் இருந்தன. ஆனால் ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அவருடைய ஒரே மகன் கணபதி பெருஞ் சோம்பேறியாக இருந்தது தான் அந்தப் பெரிய குறை.

தன்னிடம் நிறைய சொத்து இருந்தாலும் தன் மகன் கணபதி உழைக்காத சோம்பேறியாய் இருப்பது சங்கரனுக்குத் துன்பமாய் இருந்தது.

“குந்தித் தின்றால் குன்றும் மாளும்” என்று பழமொழி சொல்வார்கள். உழைக்காத சோம்பேறியான தன் மகன் பிற்காலத்தில் தன்