பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

வந்து கொடுத்தால் கூடப் போதும். என் கவலை ஒழிந்து போகும். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டது என்று தெரிந்தால்தான் என் கவலை தீரும்” என்றார் சங்கரன்.

இரண்டு நாள்கள் கழித்து அவர் மகன் கணபதி தந்தை படுத்திருக்கும் அறைக்கு வந்தான்.

"அப்பா” என்று குழைவாக அழைத்தான். சங்கரன் அவனைக் கூர்ந்து நோக்கினார்.

மகன் கணபதி ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான். "அப்பா இது என் பணம். நான் உழைத்துத் தேடிய பணம். வைத்துக் கொள்ளுங்கள்” என்று நீட்டினான்.

சங்கரன் அவனை வெறித்து நோக்கினார்.

“ஆம் அப்பா. வயலில் நேற்று நாற்று நட்டேன். அதற்குக் கூலியாகப் பெற்ற பணம் தான் இது. வாங்கிக் கொள்ளுங்கள் அப்பா" என்று மகன் ரூபாய் நோட்டை நீட்டினான்.