பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கணபதி கண்களில் நீர் வழிய தந்தையை நோக்கினான். "அப்பா என்னை நம்புங்கள். நான் திருந்திவிட்டேன். இதோ இந்த ஐந்து ரூபாய் நான் உண்மையில் உழைத்துப் பெற்ற பணம்.” என்று ஐந்து ருபாய் நோட்டை நீட்டினான்.

வெறுப்போடு சங்கரன் அந்த நோட்டைப் பிடுங்கினார். அதைக் கிழிக்கப் போனார்.

"அப்பா! அப்பா! கிழிக்காதீர்கள்! உங்கள் மகனின் உண்மையான உழைப்பு அது” என்று அவர் கையைப் பற்றினான் கணபதி.

அவன் கைகள் அவரைத் தொட்டவுடன் சங்கரன், அது உண்மையான உழைப்புதான் என்பதைப் புரிந்து கொண்டார். ஏனெனில் கணபதியின் கைகள் காய்த்துப் போயிருந்தன. கல்லுடைத்துக் கல்லுடைத்து அவன் கைகள் காய்த்துப் போயிருந்தன. கைகளால் அவன் தன்னைத் தொட்டவுடன் சங்கரன் அதைப் புரிந்து கொண்டார்.

அந்தக் கைகளை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டார். "மகனே! நீ திருந்தி