பக்கம்:பாசம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அம்பொன் மணிநூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர் மனத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார். என்று அழகாக அவர்கொண்ட பாசத்தை எடுத்துக் காட்டுகின்ருர் ஆசிரியர் சேக்கிழார். இந்த நூலினும் அவ்வாறு பாசத்தால் பற்றப்பட்ட மங்கை கல்லார் ஒருவர் வருகின்ருர். ஹர்ஷச் சக்ரவர்த்தி யின் உடன் பிறந்தவராகிய ராஜ்யபூரீ கணவன் மறைந்த பின் இறக்க முடிவு செய்தும், தன் உடன் பிறந்தவரின் வேண்டுகோளினுல் உலகில் வாழ்ந்து புத் தருடைய பொன் மொழியைப் பரப்பி கின்ருர். இந்நூலில் பாசம் பற்றிய இரு வரலாறுகள் நாடக வடிவில் இடம் பெற்றுள் ளன. இரண்டும் ஹர்ஷனுடன் தொடர்புடையன. ஒன்று குடும்பப் பாசம், மற்றென்று சமயப் பாசம். இாண்டும் பெளத்த சமய அடிப்படையில் அமைவன. இரண்டும் வரலாற்று வாயிலாகவே அமைவன. முதல் பகுதி ஹர்ஷப் பேரரசு கன்னுேசியில் நிலைத்த வரலாற்றை விளக்குவது. அதில் குடும்பப் பாசம் பின்னிக் கிடப்பதைக் காணலாம். ஹர்ஷனும், அவன் அண்ணனும், பெற்ருேரும், தங்கையும், போர் வீரரும் புத்தத் துறவிகளும் அதில் இடம் பெறுகின்ருர். அனே வரும் குலம், இனம் நாடு சமயம் ஆகிய பாசங்களால் கட்டுண்டு செலுத்தப் பெறுகின்றனர். இறுதியில் அனே வரும் ஒன்றிய உணர்வினராய்ப் புத்த சமய வளர்ச்சிக்கு வழிகானுகின்றனர். இரண்டாவது நாடகமோ சீனயாத்திரிகனுடையது. தனது சமயத்தின் மேற்கொண்ட தணியாப் பாசத் தால் கட்டுண்ட சீனயாத்திரிகன் யுவான்சுவாங் தன் தலைவராகிய புத்தர்பிரான் பிறந்த பொன்னட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாசம்.pdf/6&oldid=810299" இலிருந்து மீள்விக்கப்பட்டது