பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஊஞ்சல் ஆடு!


ஆடு ஊஞ்சல் ஆடு!
அன்னைத் தமிழ் பாடு!
பாடுபவள் காதிரண்டில்
பச்சைமணித் தோடு!

காற்றில் முடி ஆட,
கைவளைகள் பாட
ஆற்றில் அலை பாய்வதுபோல்
அங்கு மிங்கும் ஓட,
ஆடு ஊஞ்சல் ஆடு

20

பாச்சோறு