பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிறங்கள்


மல்லிகைப் பூ வெள்ளை நிறம்
மாலை கட்ட உதவுமாம்!
புல்லும் இலையும் பச்சை வண்ணம்;
ஆ விரும்பி உண்ணுமாம்!

வானம் எங்கும் நீல வண்ணம்;
வட்ட நிலா நீந்துமாம்!
கானக் கிளியின் மூக்குச் சிவப்பு!
கனியைக் கடித்துத் தின்னுமாம்!

எலுமிச் சம்பழம் மஞ்சள் நிறம்;
எங்கும் பழுத்துத் தொங்குதாம்!
உலவும் காக்கை கறுப்பு வண்ணம்;
ஒளிந்து திருடித் தின்னுமாம்!


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

33