பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குடையும் செருப்பும்


குடையும் செருப்பும் பேசின - பல
குறைகள் சொல்லி ஏசின.
நடையில் நடந்த நாடகம்!- இதை
நாமெல் லாரும் பாடுவோம்!

குடை: செத்த மாட்டின் உறுப்பே - தோல்
செருப்பே! உன்மேல் வெறுப்பே!
செருப்பு: முகத்தைப் பார்த்தால் கறுப்பே -
உடல் முழுதும் கம்பி விரிப்பே!
குடை: காலில் கிடக்கும் எருமை! - உன்
கதையில் என்ன பெருமை!
செருப்பு: நெருப்பின் மீது நடப்பேன் -
குத்தும் நெருஞ்சி முள்ளில் படுப்பேன்!
குடை: நிழலை என்றும் கொடுப்பேன் -
வந்து நனைக்கும் மழையைத் தடுப்பேன்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

37