பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்னுரை

குழந்தைகளுக்குத் தொடக்கத்தில் வேண்டியவை பாலும் சோறும்; பாட்டும் கதையும்; ஆட்டமும் பயிற்சியும்; ஓய்வும் உறக்கமும்!

வளர வளரத்தான் அவர்களுக்கு கல்வியும் கருத்தும் ஒழுக்கமும் உலகமும் வேண்டும்!

கல்வியைக் கற்கத் தொடங்கு முன் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாய்மடியே பள்ளிக்கூடம்!

அவள் தாலாட்டே முதல் பாடம்! நிலாப்பாட்டே அதற்குக் குழந்தைப் பாவியம்!

அதன் பின்னர்தான் அதன் ஆசிரியப் பணியேற்று வேறுசில கருத்துப் பாடல்களையும் உருவகக் கதைகளையும் கற்பித்து, அதன் கற்பனை வளத்தைப் பொங்கச் செய்கின்றார், தந்தை!

மூன்றாம் படியாகத்தான் ஆசிரியர் பங்கேற்று படிப்படியாக ஒழுங்கையும் உலகத்தையும் உணர்த்துகின்றார். இந்த மூன்று படிநிலைகளிலும் செப்பமாகப் பேணி வளர்க்கப் பெற்ற நல்ல குழந்தைகளே உலகைத் தன்வயப்படுத்தி உலகுக்குத் தானுதவிப் புகழ் பெறுகின்றன! அவ்வாறல்லாத பிறவோ உலகைப் புண்படுத்தி-உலகைத் தனக்காக்கி-இகழைப் பெறுகின்றன.

4.

பாச்சோறு