பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை


பிறந்ததிலிருந்து நாம் பேசுகின்ற தாய்மொழிதான் நம் பழக்கவழக்கங்களை உருவாக்குகின்றது. பழக்க வழக்கங்கள்தாம் பண்பாடாக மிளிர்கிறது. ஒரு சில நொடிப்பொழுது எண்ணினால் இவ்வுண்மை விளங்கும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழக வெகுமக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டமையால் மொழி எவ்வாறு சிதைக்கப் பட்டது என்பதைக்கூட அறியாமல் வாழ்ந்த நிலை ஓர் அவலமாகும். கடந்த ஆயிரமாண்டாகத் தொடர்ச்சியாகத் தமிழ் மன்னர்கள் அரசாட்சியை இழந்தது தமிழின வரலாற்றின் இருண்ட பகுதியாகும். இக்கால கட்டத்தில்தான் தமிழன் தன் வயிற்றுப் பிழைப்புக்காக அடிமைச்சேற்றில் புதைந்து ஆதனை இழந்தான்.

கோயில்களிலும் கல்வி நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் தமிழ் வழக்கிழந்தமையால் நேர்ந்துள்ள நலிவுகள் இருந்து வர, அண்மைக் காலமாகச் செய்தி இதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் தமிழ்க்கொலை, சிற்றூர்ப்புற வெகுமக்களின் வழக்காறுகளைக் கூட விட்டு வைக்கவில்லை. வீடுகளில் ‘சாறு’ இல்லை ரசந்தான், ‘சோறி’ல்லை 'சாதம்',"ரைஸ் தான்.

தமிழ் என்பது இப்பொழுது வெறும் மேடைகளில், பட்டிமன்ற, பாட்டரங்குகளில்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

7