பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இடையே நாம் வழி மீளலாகாது; பின் தொடர்ந்து சென்று இவன் முடிவினை முடிவாக அறிந்தே மீளவேண்டும்' என்று மிடலுடனுரைத்தார். அதன் பின் அனைவரும் எழுந்து சென்ருர், இவர் சிவகிரியை அடையவும், அவன் சேற்றுாருக்கு வருக வென்று ஆள் மூலம் சொல்லிவிட்டு அகன்று போனன். இவர் சேற்றார் புகவும், அவன் பூரீவில்லிபுத்தாரில் வந்து கண்டுகொள்க என்று மண்டிமுன் போனன். அவன் போக்கை நோக்கி இவர் புன்னகை புரிந்து என்னதான்செய்வான்பார்ப்போம்!” என்று எக்களிப்போடு தொடர்ந்து போளுர். போகப் போக அவன் எகலானன். இன்னவாறு முன்னும் பின்னுமாகப் பேறையூர், பாவாலி, பள்ளிமடை, கமுதி முதலிய பல ஊர்களிலும் பார் வைக்குத் தங்கி முடிவில் இராமநாத புரத்தை இருதிறத்தாரும் அடைந்தார். கருதிய கருத்துகள் பொரு திறத்தில் பொங்கின.

இராமநாதபுரம் பேட்டி.

தான் கருதி யிருந்த இடம் வந்தவுடன் ஜாக்சன் பெரிதும் மகிழ்ந்து தன் படைகளுடன் சேதுபதியின் அரண்மனைக்கு அருகே பெரிய மாளிகையில் பெருமிதத்துடன் இறங்கியிருக் தான். இராமலிங்க விலாசம் என்னும் அரசமாளிகையில் இவ் அரசர் உரிய பரிவாரங்களுடன் அமர்ந்திருந்தார். படைவீரர்கள் அயலே தங்கி யிருந்தனர். அப்பதியின் அதிபதி இருதிறத்தும் பொதுவாயிருந்தார். அன்றிரவு கோபால ஐயர் என்பவர் இரகசி யமாக வந்து அவ்வெள்ளைத் துரையின் உள்ளக் கிடக்கையையும், கள்ளமாகச் சதி சூழ்ந்திருக்கும் கிலையையும் இவ் வள்ளலிடம் உரைத்துச் சென்ருர். அக் கலெக்டருடைய கணக்களுன ஒரு வன் மூலம் அக்கள்ளம் தெரிந்து வந்து அவ் ஐயர் உள்ளன் போடு இங்கனம் சொல்ல நேர்ந்தார். உரிமை கூர்ந்து உணர்த் திய அவரை உறவு கொண்டாடி விடுத்து அருகே நின்ற தம்பி தானதிபதிகளுடன் அவனது கரவு நிலையையும் வரவிலுள்ளதை யும் வருக்திச்சொல்லி நேர்வதை எதிரறிந்து இவ்வீரர் வீறு கொண்டிருந்தார். இரவு கழிந்தது. முடிவு தெரிய விடிவு வந்தது.