பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பாஞ்சலாங்குறிச்சி வீர சரித்திரம்

பொருது மீண்டது.

அச் சேனைகளின் உப களகர்த்தனை கிளார்க் (Lieut. Clarke) என்பவன் கிளர்க்கெழுந்து படைவீரர் சிலருடன் பாய்ந்து இம்மன்னனே இடையே கடுத்து மறித்தான். உடனே இவர் வலக்கை வாளால் படைகளை அடுத்து வராவகை விகி, இடக்கையில் பிடித்திருந்த ஈட்டியால் அவனே எதிர்த்துக் குத்தி னர். அக்குத்து அவனுடைய மார்பின் வலப்புறத்தே பாய்ந்தது; பாயவே அவ் வெள்ளை விரன் அவ்விடத்தேயே துள்ளி வீழ்ந்து துடித்து மாய்க்கான். மாயவே மருங்குகின்ற பட்டாளங்கள் ஒருங்குகூடி உருத்துச் சுட்டன. சுடவே மன்னன் படைகள் மண்டி யேறின. கும்பல் கும்பலாய்க் கம்புகள் எங்கும் கொதிக் துச் சுழன்றன. வாள்கள் மின்னின; வேல்கள் துன்னின. வல் லயங்களும் வளே கடிகளும் எல்லேயில்லன எங்கும் எழுந்து துள் ளின. கொள்ளிவட்டம் போல் கொடிது சுற்றி இப் படைவீரர் பாயவே அப்படைகள் உடைந்து இடை முரிந்து ஓடின. ஒட் டங்கண்டதம் இப் படைகள் ஊக்கம் மீக்கொண்டு எங்கும். தாவி ஏறி மோதிச் சூறையாடி விர வெறியோடு விரைந்து திரிங் கன. வீரபத்திரர்போல் வெகுண்டு நின்ற இவ்விர- மன்னர் வேகம் குறைந்து வெளியேறலானர். கம்பி ஊமையும் தறுகண் மையோடு தொடர்ந்து அடர்ந்து விரைந்து வந்த்ார். கானேவிரர் யாவரும் எக்களிப்போடு கொக்கரித்துக் கெக்கலி கொட்டிப் பக்கம் நெருங்க இவர் பரியில் காவிப் பாஞ்சையை நோக்கி விரைவில் போனர். அனைவரும் ஆர்த்து அடர்ந்து சென்ருர். தானுபதிப்பிள்ளை மட்டும் உள்ளே அகப்பட்டுக்கொண்டார். இங்கிருந்து முன் கொண்டுபோயிருந்த சிங்கமுகத் தண்டிகை குடை கொடி சாமரம் விருதுகள் முதலிய அரிய பொருள்கள் பல அங்குத் தங்கி நின்றன. சேனைகள் பொங்கிப் போயின.

திரும்ப நினைந்தது.

பரி இவர்ந்து படைகளுடன் தென்திசை நோக்கி வெகு அாம் வங்கயின் கூட்டத்தில் பிள்ளையைக் காணுமையால் இவ் வள்ளல் உள்ளம் வருந்தி உளைந்து இரங்கினர். போரில் பலர்