பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது அதிகாரம். டேவிசன் வ்ந்தது.

இரு தினங்கள் கழிந்தன. ஒரு வழியும் தெளியாமல் உளம் மயங்கி யிருந்த இவர் தாத்துக்குடியிலிருக்கும் டேவிசன் (Devison) என்னும் துரைக்கு ஒலை ஒன்று எழுதி உரிமையுடன் அனுப்பினர். அவ்வெள்ளைக்காரர் மிகவும் நல்லவர். கல்வியறி வுள்ளவர். வர்த்தக வழியில் பெரும்பொருள் ஈட்டிச் சிறந்த செல்வாக்கோடு அங்கு அவர் விளங்கி யிருந்தார். இந் நாட்டு மொழிகளையும் கிலைகளையும் நன்கு தெரிந்து யாருக்கும் பேருப காரியாப்ப் பெருகியிருக்கமையால் அவரது சீரும் பேரும் எங் கும் சிறந்து கின்றன. அன்று அவர் பேரால் வழங்கப்பட்ட டேவிசுபுரம் என்னும் ஊர் தாத்துக்குடிக்கு வடக்கே 2 மைல் தாரத்தில் இன்றும் விளங்கியுள்ளது. விளைபுலங்கள் முதலிய வளங்கள் மிகுந்து கிளைகளோடு கெழுமி யிருந்த அவர் இப் பாஞ்சை மன்னன்பால் வாஞ்சை மிகுந்து வரிசை செய்து வந்தார். இருவரும் உரிமைமீக்கூர்ந்து பெருகட்போடு மருவி யிருக்கார் ஆதலால் தாம் அடைந்துவந்துள்ள அவல நிலையை கேரில் சொல்லக் கருதி அவரை இவர் அழைத்திருந்தார். ஒலை கண்டதும் உவந்தெழுந்து ஒண்பரி ஏறி ஒல்லையில் வந்து அவர் பாஞ்சையை அடைந்தார். அடையவே இவர் எதிர் எழுந்து போப் முதிரன்போடு கழுவி மகிழ்ந்து முகமன் உரையாடி லட் சுமிவிலாசம் என்னும் அரச மாளிகைக்கு அவரை அழைத்து வந்தார். அழகிய ஆகனங்களில் இருவரும் அமர்ந்து அளவளாவி யிருந்தார். தம்மை அழைத்த காரியம் யாது? எனத் தழைத்த அன்புடன் இம்மன்னனே நோக்கி அவர் புன்னகை செய்து கேட்டார். கேட்கவே ஜாக்சன் துரை பேட்டிக்கு வரும்படி அழைத்துத் திருநெல்வேலி குற்ருலம் முதலிய பல இடங்களுக் கும் அலைத்து முடிவில் இராமனுதபுரத்தில் வைத்துத் தமக்குச்