பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lla பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பொழுது உம்மேல் சொல்லியன வெல்லாம் உண்மைதானே? எவ்வளவு கொடுமையாய் நீர் நடந்திருக்கின்றீர் குற்றங்களை ஒப்புக் கொள்ளுகிறீரா? அல்லது ஏதேனும் பதில் சொல்ல வேண்டியது உண்டா? இருந்தால் சொல்லும்' என்று அவர் சொல்லியருளினர். அங்ஙனம் சொல்லவே பிள்ளை எழுந்து பேச லானர். அவருடைய பேச்சுகள் சாதுரிய சாகசங்கள் கழுவி வந்தன. மதிநலம் மருவி நியாய வாதங்களாய் நிலவி எழுந்தன.

பிள்ளையின் பதில்.

உள்ளம் துணிந்து உறுதி ஒர்ந்து உரிமையோடு பேச நேர்ந்தார்: "அருமைத் துரைகளே கரும நீதிபதிகளே! இந்தப் புனிதமான நியாய சபையில் ஜாக்சன் துரையவர்கள் இதுவரை அநியாயங்களையே நிரப்பினர். கண்ணியம் வாய்ந்த மேலோர் களாகிய உங்கள் முன்னிலையில் கொஞ்சமும் வாய்கூசாமல் நெஞ்சமும் அஞ்சாமல் படுமோசமாய் என்னைப் பழித்து இகழ்ந்தார்? கொடியன், கோளன், வஞ்சன், என இழிவான வசைமொழிகளை வாரி இறைத்து என்னே வைது பழித்தார். அவருடைய நெஞ்சு நிலைகளையே வஞ்சமாக என்மேல் வரைந்து சுமத்தினர். உள்ளத்துள் உள்ளன. வெளியேவாய்வழி ஒழுகின.

கெளரவம் பொருந்திய கும்பினியாரின் பெருமையைக் குலைக்க இவர் சிறுமை பல செய்துள்ளார். அவ் வுண்மைகளுள் சிலவற்றை இப்புண்ணிய மன்றத்தில் கூறுகின்றேன். அவரைப் போல நான் வாய்சாலகன் அல்லன். அறிந்ததை எனக்குக் தெரிந்த மொழிகளில் இயன்ற வரை சொல்லுகின்றேன். ஏழை சொல் அம்பலம் எருது என்னும் பழமொழி யிருந்தாலும் நீதி யான இக் கும்பினி மன்றத்தில் எனக்கு நல்ல நியாயம் கிடை க்கும் என்றே உள்ளம் உறுதியாய் நம்பி நிற்கின்றேன்.

'கருமத் துரைகளே! தெய்வ சாட்சியாகவே நான் சொல் லுகின்றேன்; கருணை செய்து கவனிக்க வேண்டும். இ க் க ஜாக்சன் துரையவர்கள் திருநெல்வேலியில் இருந்து கொண்டு