பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நியாயம் தெளிந்தது 115

கன்னே வந்து கண்டுபோம்படி எம் மன்னனுக்கு ஒரு கடிதம் வழுதி அனுப்பினர். அது ஆகஸ்டு மாதம் பதினருக் தேதி மணிக்குப் பாஞ்சாலங்குறிச்சிக்கு 4 هhغrما (1798ـ8س-16) வந்தது. அக்தத் திருமுகத்தைக் கண்டதும் எங்கள் அரசு திகைத்தது. அவர் எளிதாக இடம் பெயர்ந்து போப் எவரையும் பார்ப்பதில்லை. ஆயினும் சங்கத்தின் அதிகாரம் பெற்று வந்துள் ளவராதலால் நேரே போய்ப் பார்த்து வருவோம் என்று மாட்சிமை மிக்க தங்கள் கும்பினி ஆணையை மதித்து அவர் அன்புசெய்து பிரயாணத்திற்கு ஆயத்தமாயினர். த ம் பி யும் நானும் தானேயும் உடன் தொடர்ந்தோம். உரிய ஆடம்பரங்களு டன் ஒரு முகமாய் கடந்து திருநெல்வேலியை அடைந்தோம். அங்கு இவர் இல்லை என்பது தெரிந்தோம். எங்களைக் குற்ருலத் துக்கு வரும்படி சொல்லி விட்டு முதல்நாள் பிற்பகலில் அங்குப் போயிருப்பதாகக் காரியாலயத்தில் உள்ளவர் உணர்த்தினர். உணர்த்தவே நாங்கள் மாருென்றும் கருதாமல் உரிமையுடன் அனைவரும் அங்குச் சென்ருேம். வந்துள்ளதை அறிவித்தோம். இப்பொழுது சமயம் இல்லை; சொக்கம்பட்டிக்கு வரச்சொல்லு பார்த்துக் கொள்ளலாம் என்று துபாஷி மூலம் சொல்லி விட்டு இவர் துரிதமாய்ப் போய்விட்டார். அங்கும் போனுேம். இங்கே இடமில்லை; சிவகிரிக்கு வருக என்று சென்ருர். அப்பொழுது தான் இவருடைய செயல் எங்களுக்கு வெகுளியையும் வெறுப் பையும் விளேத்தது. சந்தேகத்தையும் உண்டு பண்ணியது. ஆயி லும் சங்கத்தின் நீதிகிலையையும் நெறிமுறைகளையும் கினைந்து தீது யாதும் நிகழாதென்று துணிந்து பின் தொடர்ந்து சென்ருேம். அங்கும் ஏமாற்றி விட்டுச் சேற்றுார்க்கு வருக என்றுபோனர். அவ்வாறே பூரீவில்லிபுத்தனா, பாவாலி, தும்பிச்சினாயக்கனூர், கூடலூர், திருச்சுழி, கமுதி முதலிய இடங்களுக்கெல்லாம் வீணே அலைத்து முடிவில் இராமநாதபுரத்தை அடைந்து தக்க சமயம் பார்த்துப் பேட்டிக்கு வரச் சொன்னர். யாதொரு, தடையும் சொல்லாமல் சரி என்று சம்பி எம் அரசர் எழுந்தார்.