பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

முறைப்படி நானும் பரிவாரங்களும் தொடர்ந்து பின் போ குேம். இவரிருக்க மாளிகையை அடையவும் இருவர் எதிர்வந்து "ஜமீன்தார் மட்டும் தனியே வர வேண்டும்; வேருெருவரும் உள்ளே வரக் கூடாது' என்று எங்கள் எல்லாரையும் தள்ளி வெளியே கிறுத்தினர். அரசைக் கனியே விட மனமில்லாமை யாலும், இவர் சதி சூழ்ந்திருப்பதாக முன்னரே சி றி து அறிந்திருக்கமையாலும் ஊமைத் தம்பியும், நானும் உ ட ன் தொடர்ந்தே உட்புகுந்தோம். பாராச்சேவகர்கள் கொஞ்சமும் இரக்கம் பாராமல் எங்கள் பரிவாரங்களைப் பார்த்துப் பக்கத்தே அடித்துத் தரத்தினர். அரசு முன்னும் சாங்கள் பின்னுமாக மேல்மாடத்தை அடைந்தோம். இவர் சுமுகமின்றிக் கடுத்து எங்கள் சமுகத்தைச் சுழித்து நோக்கி வரிவரவுகளைக் குறித்து வசைமொழியாடினர். அவர் மானம் மிகவுடையவர்; யாரிட மும் ஈனமுற இசைக்து நில்லார் ஆகலான் இங்கிருப்பது சரி யில்லை என்று வெறுப்போடு விரைந்து எ ழுந்தார். அங்ங்னம் எழுந்தவுடன் மல்லர் சிலர் பாய்ந்து அல்லல் செய்ய நேர்ந்தார். அவர் அருங்திறலாளர் ஆதலால் உடைவாளை யுருவி இடையே தடுத்தவரைத் தடையறச் செப்து தாவி இறங்கினர். அவரது விர கிலேயைக் கண்டதும் இவர் வெருவி ஓடி ஒரு மறைவில் ஒளிந்தார். அன்று அங்கு ஒளியாது கின்ருரேல் இன்று இவரை இங்கே காண முடியாது. இவர் ஓடியதை நோக்கி உள்ளுற இகழ்ந்து அவர் கீழே போளுர்; போகவே சேனைகளுடன் வந்த சேனதிபதி எதிர்த்தார். எங்கள் படைகளும் இடை வந்து சேர்க்தன. கலகம் மூண்டது; கொலைகள் நீண்டன. இடையே தளபதி செத்துக் கரையில் உருண்டான். யாருடைய ஆயுதத் கால் அவன் ஆவி துறந்தானே அது பாதும் தெரியாது. எதிர்த்த படைகள் உடையவும் அவர் கெலித்துப் போளுர். பரிவாரங்க ளும் பின் தொடர்ந்து போயினர். நான் மட்டும் கீழே இறங்க முடியாமல் மெய்ம்மறந்து மேலே நின்று விட்டேன். இவர் என்னைப் பிடித்துக் கொண்டதாக விணே இங்கு பிதற்றுகின்ருர்.