பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நியாயம் தெளிந்தது 123

டிலிருந்து வந்துள்ள நாம் இந் நாட்டின் இயல்பறிந்து வலி தெரிந்து இதமாய் நிற்றல் நலமாம். நாம் என்ருக அரண் கொள்ளுமுன் யாண்டும் முரண் கொள்ளலாகாது. பாளையகார ருள் தலைமையாயுள்ள அக் குலவிரரை இவ்வேளையில் நாம் இத மாப் வணக்கித் துணையாக்கொள்ளின் நம் ஆட்சி மிகவும் மாட்சிமை யடையும். அடுத்திருந்து நெடுநாளாக அவரது உண் மையை அறிந்துள்ளமையால் இவ்வண்ணம் எடுத்து எழுதலா னேன். பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். நம் சங்க அரசு எங்கும் பங்கமின்றி வாழத் தேவனைப் பிரார்த்தித்திருக் கின்றேன்.' என இங்ங்னம் உரிமையுடன் எ ழுதியிருக்க அவ் அருமைக் கடிதத்தை ஆவலோடு முழுவதும் படித்தறிந்து தலைமை அதிகாரிகள் எல்லாரும் ஒருங்குகூடி இவருடைய நிலைமைகளை நீள கினைந்து ஆழமாக ஆலோசித்தார். ஒரு கறுப்பு மனிதனைக் குறித்து நம்மவன் இவ்வள்வு தாரம் புகழ்ந்து எழுதுவதென்ருல் அவன் எவ்வளவு உயர்ந்தவன யிருப்பான் என்று உள்ளுற எண்ணி அவர் உவந்து வியந்தார். இவ் விர மன்னனை நேரே காணவேண்டும் என்று அவர் கருதியிருந்த ஆசை பெருகி வளர்ந்தது. மறுநாளே டேவிசனுக்கு ஒரு கடிதம் எழுதினர்.

தாங்கள் நண்புகூர்ந்து அனுப்பிய நிருபம் வந்தது. விவரம் முழுவதும் தெரிந்து அனைவரும் உவகை கூர்ந்தோம். அப் பாளைய காரரை நேரே கண்டு மகிழ வேளையை எதிர்நோக்கி நாம் விரும்பியிருக்கிருேம். கூடுமானல் அவரை இங்கே அழைத் துக்கொண்டு வரவும். மற்றவை நேரில்.’’ என இவ்வாறு சுருக்க மாக எழுதி அனுப்பி மேலே நிகழ்வதை அவர் வருக்கமாக எதிர்பார்க் திருந்தார். இந்த விர மன்னனே நேரே காண வேண் டும் என்ற ஆவலும் மதிப்பும் கும்பினி அதிபதிகளிடம் அது பொழுது குதாகலங்கள்ாய்க் குலாவி நின்றன. அந்த அன்பு நிலையில் புதுமை விளைவுகள் இனிது பொலிந்திருக்கன.

நீதி மன்றத்தில் நடந்த விசாரணைகள் யாவும் யாதொரு முடிவுங் கொள்ளாமல் ஆலோசனையில் அமர்ந்து நின்றன.