பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

ரகுநாதன். க.எ-வது பட்டம் 1501-1513. இவன் பேரறிவாளன். கலைகள் பல கற்றவன். புலவர் களோடு அளவளாவி அறிவின்பங்களே அனுபவித்து, உலக நிலையை ஒர்ந்து எவர்க்கும் இகம்புரிந்து, இன்னருளுடைய ஞய்ப் பன்னிர ண்டு ஆண்டுகள் அரசைப் பாதுகாத்து வந்தான். இவனுக்குச் சிவத்தையா, ஜெகவீர பொம்மு என இரண்டு புதல்வர்கள் இருந்தனர். முன்னவன் பன்னிரண்டு வயதில் இறந்து போயினன்; ஆதலால் பின்னவன் முறையே அரசினை

யடைந்தான். வரிசையோடு ஆண்டு வந்தான்.

ஜெகவீரபொம்மு. கஅ-வது பட்டம் 1513-1522. இவன் ஒன்பது ஆண்டுகள் அர சுபுரிந்தான். அதன் பின் இவனுடைய மகளுகிய விஜயராகவன் பட்டத்துக்கு வக்கான். விஜயராகவன். கக-வது பட்டம்: 1522–1532. இவன் பத்து வருடம் குடிகளைப் பரிபாவித்து வந்தான். அதன்பின் இவன் கம்பியாகிய இராசபாண்டியன் அரசுக்கு வந்தான். ஆட்சி முறையில் மாட்சிகள் வளர்ந்தன.

இராசபாண்டியன். உ0-வது பட்டம்: 1532-1544. இவன் அறிவும் ஆற்றலும் அமையப்பெற்றவன். கினைக் கதை முடிக்கும் வினைத்திறமையாளன். சிறிய ஜமீளுயிருக் தாலும் பெரிய அரசியல் முறையைப் பேணி கின்ருன். குடிகளுக்கு நலம்புரிவதே கொற்றவன் பலம் என்னும் தத்து வத்தை முற்றவும் உணர்ந்து முறை புரிந்து பன்னிரண்டு வருடம் நன்கு பாதுகாக்கான். அகன்பின் இவன் மகளுகிய

துரைமல்லு என்பவன் முறையே அரசுக்கு அதிபதியா யினன்,