பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

லும் பொப்யா மொழிக்குத் தாங்கள் ஒர் மெய்யான சான்ருப் வையம் அறிய வெய்ய நிலையில் இங்கே விளங்கி கிற்கின்றீர்கள். பல பல புலம்பி என்? இந் நிலை இனி எங்கிலையில் நிறுத்துமோ? என்னவாறு முடியுமோ? யாதொரு வகையும் தெரியவில்லை.

மன்னன்:- யாது வரவேண்டுமோ? அது வருக; என்ன விட்டு எது அகல வேண்டுமோ? அது அகல்க, கேடும் ஆக்க மும் இன்று புதிதாய் வருவன அல்ல; கருவுற்ற அன்றே உரு வும்.று வந்துள்ளன. அவற்றின் வரவு செலவுகளை நினைந்து நாம் இங்கே வருந்துவதால் யாதும் பயன் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒர் முடிவுண்டு. வருவனவெல்லாம் நமது நன்மைக்கே என்று கம்பி நாம் உண்மையான திண்மையுடன் இருக்க வேண்டும். தம்பி:-பகைவர் கைப்பட்டுப் பழியோடு வந்து இப்படிப் பதைத்து இருப்பதை விட, அன்று புதுக்கோட்டையில் புகுந்த படைகளோடு எதிர்த்து அமராடி அங்கேயே இறந்து போயி ருக்கலாம்; அச்சிறப்பான இறப்பையும் இழந்து விட்டு இங்கே வந்து இப்படி இழிந்திருக்கின்ருேம். இந்தஇருப்பு நமக்கு மிகவும் ஈனமாகும். வென்றிவிறுடன் மாண்டிருந்தால் என்றும் நன்ரும். மன்னன்:- அன்று அது செய்திருக்க வேண்டியது அவ சியமே, ஆயினும் உண்டிருக்க வீட்டில் உதிரம் சிந்த ஊறு விளைப்பது சீசன்றே என்று ஏமாந்து சிந்தித்து கின்றேன். பட்டாளங்களை அங்கேயே வெட்டி முறித்த வென்று போயி ருக்கலாம்; அன்றேல் பொன்றி முடிந்திருக்கலாம். அவ் விரண் டையும் இழந்து பிடியுண்டு வந்து இங்கே இவ்வாறு இழிக் திருப்பது ஈனமே காரியத்தைக் கை கடக்க விட்டு இனி விரி யம் பேசி ஆவது என்? எ ப்தும் முடிவைப் பொறுமையோடு எதிர்பார்க் திருப்போம். வருவது எதுவோ அது வந்தே தீரும். தம்பி:- இங்கு வந்து ஏழு நாட்கள் ஆகின்றன. நீதியை விசாரித்து யாதொரு முறையும் செய்யாமல் சேனாபதி நம்மைச் சிறையில் வைத்துச் சீரழித் திருக்கிருன். நேர்மை இல்லை. முகத் கைப் பார்த்தால் அவனுடைய கெஞ்சில் கொடுமையே குடி கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. முடிவு இன்னதென்று