பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. காரியம் சூழ்ந்தது 325

girl-fil-L-suffi (Robert Turing), 1 £9ms; om-6)uciu (George Hughes) 2 மேஜர் பிற்கட்டு (Pirkett), 3

4

&sigotéo L5GTGT&T (Colonel Brown),

க்க நான்கு துரை மார்களும் அவனுடைய இரு மருங்கும் பங்கோடு மருவி இருந்தனர். பாளையகாரர் அனைவரும் நேரே வரிசை வரிசையாய் அயல் எங்கும் அமர்ந்திருந்தார். பெரிய ாசுகார்களும் உத்தியோக அதிகாரிகளும் இடங்கள் தோறும்

தொடர்ந்து ஈட்டமுற் றிருந்தனர்.

குதிரைப் படைகளும், காலாட் சேனேகளும் ஆயுத பாணி களாப் அணி அணியாய் அயலே சூழ்ந்து அடலோடு கின்றன. isörf (Lieutenant Turner), L–éveoma (Dollas) apgøSua ser கர்த்தர்கள் தறுகண்மையுடன் படைத் தலைமையில் நிலை பெற்று |lன்றனர். அங் நகரிலும் அயலூர்களிலும் இருந்து வந்த சனங் கள் வெளியே திரள் திரளாய்த் திரண்டு நிகழ்வதை எதிர் நோக்கி நிறைந்து கின்ருர். கிகழ்ச்சி நிலைகளைக் காண எல்லா ருடைய நெஞ்சங்களும் நெடிது அவாவிக் கடிது வாவிகின்றன.

விசாரணை தொடங்கியது.

அக்டோபர் மாதம் பதினருந் தேதி (16-10-1799) முப்பகல் பத்து மணிக்கு நேரே விசாரணை தொடங்கப்படடது.

நீதி மன்றத்தில் நியாயமான முறையில் குற்றங்கள் விசாரிப்பது போல் பா வ னை க ள் பல செய்யப்பட்டன. சேனதிபதியாய் கின்ற பானர்மேனே அங்கு நீதிபதியாய் அமர்ந்து கொண்டான். நேரில் வந்து போரில் சேர்ந்து பொருது கடந்து படை யிழந்து வயிறு எரிந்து போன அத்தளபதி இப் பொழுது நடுவு நிலையாய் அமர்ந்து எப்படி நீதி புரிந்திருப்பன்? இதில் எவ்வளவு நியாயம் செய்திருக்க முடியும்? எத்துணைச் வஞ்சனைகள் இடை புகுந்திருக்கும்? என்பதை அறிஞர் கள் எவரும் எளிதில் தெளிவாய் அறிந்து கொள்ளலாம்.