பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

துரைராஜபொம்மு. க.உ-வது பட்டம்: 1630-1636. வேட்டையாட்டத்தில் இவன் விருப்பமிக வுடையவன். அதன்பொருட்டு வல்லநாட்டு மலைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். நாட்டைப் பாதுகாப்பதில் பராமுகமாயிருந்தமை யால் இவன் காலத்தில் பாளையம் சிறிது பழுதடைந்திருந்தது. ஆறு வருடங்கள் ஆண்டான். பின்பு இவனுடைய மகன் வீரதளவாய் வந்தான். நீர்மையோடு நெறி முறை புரிந்தான்.

வீரதளவாய். கா-வது பட்டம்: 1686-1641. தந்தை காலத்தில் தளர்ந்திருந்த ஆட்சியை இம்மைக்கன் வந்து மாட்சியுறச் செய்தான். குடிகளை நன்கு பேணி யாரிட மும் இதமாய் அன்பு செய்திருந்தான் ஆதலால் அனைவரும் மன மகிழ்ந்து இவனே ஆர்வமோடு போற்றி நின்ருர். பின்பு இவனு டைய மகளுகிய விஜயரகுநாதன் பட்டத்தை யடைந்தான்

விஜயரகுநாதன். கச-வது பட்டம்: 1641-1648. இவன் அரிய பெரிய போர் விரன். வாளாண்மை யோடு தாளாண்மையிலும் சிறந்து வேளாண்மைகளை யாண்டும் வளம் செய்து ஏழு ஆண்டுகள் காட்டை யினிது பாதுகாத்தான். பின்பு இவன் மகன் குமார விரன் அரசினை யடைந்தான்.

குமாரவீரன். கடு-வது பட்டம்: 1648–1653. குதிரை ஏற்றத்தில் இவன் மிகவும் கைதேர்ந்தவன். நல்ல கல்விமான். சொல்வன்மை யுடையவன். எ ல் லா வுயிர்களிடத்தும் இரக்கமுள்ளவன். போன்போடு குடிகளைப் பேணி வந்தான். ஐந்து ஆண்டுகளே யிருந்தான். பின்னர் இவ

லுடைய மகன் ரணவீரராமு ஆட்சிக்கு வந்து அரசுபுரிந்தான்.