பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

7. நான் கோட்டையை விட்டு வெளி யேறி யுள்ளேன் என்பதை அறிந்ததும் நீர் ஒட்டமாய் வந்து என் திருநகருட் புகுந்து பெரு நிதிகளை யெல்லாம் கவர்ந்து ஆனை, குதிரைகள் முகவிய அரிய பொருள்களை யெல்லாம் வாரி உமக்கே உரிமை யாக அபகரித்துக்கொண்டீர் இங்கே ஒரு பெரிய நீதிமான் போல் அமர்ந்து பேசவும் செய்கின்றீர்! நீர் சாதியான குல மகன் ஆனல் என்னைக் கும்பினி அதிபதிகளிடம் அனுப்பி அவர் முன்பு நீதி விசாரணை செய்து.என் மீது குற்றம் கண்டுபிடித் துக் குறித்ததைச் செய்க, நேரில் வந்து போர் புரிந்து சீரழிந்து சிதைந்துபோன நீரே படைக்கலைமை நிலையில் இக்க வழக்கை முடிக்க முந்தியிருக்கலால் எங்க அளவு இதில் நியாயம் கிடைக் கும் என்பதை நான் எதிரறிக் துள்ளேன்; ஆவது ஆகுக' என மன நோவுடன் யாவரும் திகைக்க எதிருரை கூறினர். சேனதிபதி மாறுபாடாய்க் குற்றங்களே விரித்துக் கொடிய நோக்கோடு குறைகள் கூறி வருங்கால் இம்மான வீரர் அவனை யாதும் மதியாமல் உல்லாச வினேகமாய் உறுதியாய் கின்ருர். கும்பினி அதிகாரத்துக்குக் கீழ்ப் படியாமல் பிழைகள் பல புரிந்ததாக வரைந்து சொல்லி முடிவில் நீர் ஏதேனும் சொல்ல வேண்டியது உண்டா?' என்று அவ் வெள்ளைத்துரை இவ் விரக் துரையை நோக்கிக் கேட்டான். அக்கக் கேள்விக்கு இவர் யாதொரு பணிவும் காட்டாமல் மிகவும் அலட்சியமா அவனைப் பார்த்துச் சொன்னர். கன்னச் சிறிதும் மதியாமல் எள்ளி அவ மதித்துள்ளான் என அவ் வெள்ளையன் உள்ளத்தில் வெங் கோபம்மூண்டது. கான் கேட்ட கேள்விக்கு இவர் பதில் சொன்ன விதத்தைக் குறித்து அவன் எழுதி வைத்துள்ள குறிப்பு அயலே வருகிறது. க்ருதிக் கான வுரியது.

“On being asked if he had any thing further to say? He

replied, he had not, with on appearance of the greatest indifference.” | (R. G.)

மேலே ஏதாவது சொல்ல வேண்டியது உண்டா? என்று

கேட்டேன்; அதற்கு அவன் எதும் இல்லை என அளவு கடக்க