பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

சனங்கள்? என்ன உறவு? என்ன காலம்? என்ன கோலம்? என்ன வாழ்வு? இது?' என இன்னவாறு பல பல பன்னி வருந்தி கொந்து பரிந்து நின்ருர். இதல்ை உலக மக்கள் இக் தலை மகனிடத்தே கொண்டிருந்த உரிமையும் உள்ளன்பும் உறுதி நிலையும் பரிவும் பண்பும் நன்கு உணர லாகும்.

உண்மை அறிய உரிய கருவி.

ஒருவனது அரிய தலைமையையும் இனிய நிலைமையையும் சரியாக அளந்து அறிதற்கு அவனிடம் பொது சனங்கள் கொண்டுள்ள பிரியமே பெரிய அளவு கோலாயுளது. கயத்தாறு ஊரில் அன்று கூடியிருந்த மாந்தர் யாவரும் இவ் விர வேந்தன் பால் பரிவு கூர்ந்து ஆர்வம் மீதுணர்ந்து கின்ற நிலை அதிசயமாப் விளங்கியது. அது இவரது இயல்பான உயர் நிலைகளைத் தெளி

வாக விளக்கியருளியது. நாட்டுமக்கள் நன்மையைக்காட்டினர்.

"குடிசனங்கள் அன்புரிமை கொண்ட அளவே

முடிமன்னன் மேன்மை முடிவாய் - அடியளந்து காண வருங்காண் கதிநிலைகள் அன்னவரால்

பேண வருமே பெரிது.”

என்னும் உறுதிமொழி ஈண்டு ஊன்றி உணர வுரியது.

குடிகள் உவந்து வரக் கோன் உயர்ந்து வருகிருன் என் னும் அரசியல் தத்துவம் ஆன்ற பொருளுடையது. ஊரார் பிரிய மாப் ஒருவன் மீது உரிமை காட்டிவரின் அது அவனது பெரு மையை உலகம் காண ஒளிசெய்து வருவதாம். அங்கே திரண்டு கின்றவர் அன்று காட்டிய ஆர்வமும் மொழிகளும் செயல் களும் இவ் வென்றி விரனது சீர்மை நீர்மைகளை நன்று விளக்கி நின்றன. பாசம் தோய்ந்த பரிவுரைகள் தேச மக்களிடமிருந்து ஒசை செய்து உரிமை மீதுணர்ந்து ஒருமுகமாய் மருவி வந்தன.

பொது சனங்கள் மனம் மறுகி இவ்வாறு புலம்பி நிற்கச் சேனதிபதி சினந்து செய்த தீர்ப்பை இனிமேல் பார்ப்போம்.