பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டபொம்மன் வழிமுறை. 31

ரணவீரராமு. ா.சு-வது பட்டம்: 1658-1659. அருந்திறலும் பெருந்தகவும் இ வ னி ட ம் ஒருங்கமைக் திருந்தன. போராற்றலில் பேராற்றலுடையவன். ஆட்சிக் திறத்திலும் அதி நிபுணன். இவன் காலத்தில் நாடு பல வகை யிலும் மாட்சி யுற்றிருந்தது. ஆறு வருடம் அரசைப் பாதுகாத் திருந்தான். அதன்பின் ரகுவீரராமன் ஆட்சிக்கு வந்தான். ரகுவீரராமன். க.எ-வது பட்டம்: 1659-1670. இவன் பெருங் கொடையாளி. முன்கோப முடையவன்.

தம்பாடு கூறித் தன்னை அடைந்தவரை என்னபாடு பட்டேனும் கன்கு ஆதரிக்கும் இனிய இயல்பினன். பதினெரு வருடம் குடிகளை அன்போடு ஆதரித்து வந்தான். அதன்பின் இவன் மகளுகிய பால்ராஜபொம்மு பட்டத்தை அடைந்தான்.

பால்ராஐபொம்மு. ங்,அ-வது பட்டம்: 1670-1676. இவன் எவரையும் எளிதில் நம்பும் இயல்பினன். தற் புகழ்ச்சியுள்ளவன். நல்ல கல்வியறிவில்லாதவன். சிற்றின்ப நுகர்ச்சியில் அழுந்தி எப்பொழுதும் விண்பொழுது போக்கி யிருந்தான் ஆதலால் ஜமீனே இவன் நன்கு பாதுகாக்கவில்லை. குடிகளும் இவனிடம் அனபுபாராட்டாமல் அவமதித்திருந்தார். இவன் ஆறு வருடங்கள் இருந்தான். அதன் பின் இவனுடைய மகன் ஆகிய ரகுவீரனன் என்பவன் பட்டத்துக்கு வந்தான்.

ரகுவீரணன். கூக-வது பட்டம்: 1676-168.1. தந்தை காலத்தில் பழுதுபட்டுக் கா ம் ச் சி யுற்றிருந்த ஆட்சியை இம் மைந்தன் வந்து மாட்சியுறச் செய்தான்.