பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 339

கோளை மூட்டிய கொடியவர் கலைகளைத் துமித்து, என் வாளை நீட்டி இவ் வையகம் காட்டுவேன்; எனது நாளை நீட்டிமுன் நான்முகன் வைத்திலன்; இந்த வேளை மூட்டிய விதியினை கினைந்துநான் அமர்ந்தேன்; (1) இக் கணத்திலும் எறுழ்வலி மடங்கல்போல் பாய்ந்து பக்கம் நீடிய படைகளைப் படுத்துயிர் குடித்துத் தக்க என்திரு நகரினைச் சாருவேன்; கடையாய்க் கைக்கு அடைக்கயின் கடப்பது பழிஎனக் கழித்தேன்; (2) குனிந்து கும்பிட்டுக் கோட்சொல்லி இச்சகம் பேசி வனந்து தம்முடல் வளர்க்கின்ற மாண்புடை யார்முன் புனேந்து கன்குல வீரமே பூண்டவன் ஒருவன் இனைந்து நாணியே இறக்கனன் என்பதிங் கெய்க. (3)

பேடி யாளராய்ப் பெருகிமுன் னிற்பவர் இங்கே கூடி வாழலாம் அன்றியே கோக்குல வீரம் குடி யுள்ளவர் துணிவுடன் அயலிடம் அகன்று டிே நிற்கலாம் எனுமொரு விதியைநேர் கண்டேன். (4) உள்ள நாளெலாம் வெள்ளேயர்க்கு ஊழியம் புரிந்து பள்ளை ஆடுபோல் பணித்தது படுத்தொரு முகமாய் எள்ள லோடவே இளிவுடன் கழியநீர் இருந்தீர் ஒள்ளி யார்முனம் ஒளியிழந் திழிவதை உணர்வீர்!’ (5) (விர பாண்டியம்) என்று இத் திண்டோள் வீரர் நேரே மண்டியிருந்த பாளைய காரரைப் பழிப்போடு பார்த்து இவ்வாறு இளிப்புரை யாடினர். அகன்பின் தமக்குக் தாக்கு இட்டிருக்க * புளியமர க்கை நோக் 藻 இந்தப் புளியமரம் கயத்தாற்றுக்கு மேல்புறம் மங்கம்மாள் சாலேயில் உள்ளது. அவ்வழியே போபவர் யாவரும் இவரது ஞாபகச் சின்னமாக ஒவ்வோர் கல்லே எடுத்து இட்டு அங்கே வணங்கிச் செல் கின்றர். கற்கள் குவிந்து கிடக்கின்றன. இவர் உறவினர் ஆண்டு தோறும் சென்று ஆண்டு வழிபட்டு வருகின்றர். அவ் வழிபாடு ஒர் வீர தேவதையின் தொழுகையாய் இன்றும் கடந்து வருகின்றது. தேச சுதந்திரத்திற்காகத் தன் உயிரைத் துறந்த வென்றி வீரனேத் தேச மக்கள் யாவரும் கெஞ்சம் உருகி கினேங்து போற்றி வருவது உயர்ந்த ஏற்றமாய் ஒளிபுரிந்து சிறந்த சீர்மையா விளங்கி யுள்ளது.