பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 341

தாக்குக்கு அமைந்திருக்க அந்தப் புளியமரத்தின் அடியை அடைந்து கொடிய சதி புரிந்தவரைச் சிறிது கருதி நோக்கி ஒருவகை முறுவலும் புரிந்து பருவாலின்றி ஊக்கி கின்ருர்,

துரக்கில் ஏறியது.

உள்ளம் ஒரு சிறிதும் கலங்காமல் பெருமிதமாப் அங்க னம் ஊக்கி நின்றவர் பின்பு தாக்கில் ஏறினர். அருகே ஒதுங்கி அனைவரும் அலமந்து மறுகினர். இவர் 'முருகா” என்று பெரு மிதத்தோடு அக் கொலைக் கயிற்றை வலக் கையால் பிடித்தார்: :சேமான கோளர்முன் வாசம் ஆகாதென்று இப் பாசமே எனக்குப் பாசமாய் நின்று பரிந்து உதவுகின்றது' என்று பகர்ந்து உடனே ஊமைத்தம்பியை நினைந்து உளைந்து வருக்கினர்; இளவலை எண்ணி மொழிந்தது உளமலி துயரை உணர்த்தியது. முடிவில் மொழிந்தது. "என் கோட்டையைப் பாது காத்துப் பகைவரைப் பாடழித் துப் போர்முனையில் அங்கேயே நான் இறந்திருப்பேன் ஆல்ை இந்நாட்டுக்கு மிகவும் நலமாயிருந்திருக்கும்' என்று சொல்லிக் கொண்டே தம் தலையைக் தாக்குக் கயிற்றில் மாட்டினர். அவ் அமையம் ஆகாயத்தில் இரண்டு கருடர்கள் வட்டமிட்டு உலாவின. இவர் ஏறி நின்ற நாற்காலியை எட்டிவிழ எற்றிப் "பட்டெனத் தாங்கிப் பதைத்து மாண்டார். கண்டவர் யாவரும் கண்கள் நீர் சிந்திக் கருத்தழிந்து கொந்தார். பகைவராய் மண்டி யிருந்தவரும் கூட இவரது மன நிலையை வியந்து மறுகி யுளைக் தார். ஊரார் யாவரும் பெரிதாய் ஒலமிட்டு உருகி அழுதார்.

த ம் பி ய ர் த வி த் த து.

பின்பு சிறையிலிருந்து தம்பி முதலான அனைவரும் வெளி யில் ஒடி வந்து கொலை நிலையைக் கண்டு குலை துடித்து அலறினர்.

  • பாசம்= அன்பு, கயிறு. வாசம்= வசித்திருப்பது. குழவும் கோளர்களும்கோழைகளுமாயுள்ள இடத்தில் நேர்மையான ஓர் வீரன் வாழ்வது ஈனமாம் என்பது கருத்து. இம்மான வீரர் மனம் கொதித்து மரண சமயம் எண்ணியிருக்கும் கிலேயை ஈண்டுக் கண் ஜான்றிப் பார்க்கின்ருேம்; கருதி நொந்து மறுகி யுளேங்து உறுதி ஓர்கின்ருேம்: