பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

உள்ளம் பதைத்து உணர்வு குலைந்து உயிர் மறுகிக் கண்ணிர் வெள்ளமாய்ப் பெருகி ஓடத் துள்ளி அலமந்து கதறி அழுதது கொடிய பரிதாபமாய் கெடிது ஓங்கி நின்றது.

ஆவி போனபின் அந்த அருமைத் திருமேனியை அங்கே கூவி யழுது குலைந்து கின்ற உறவினரிடம் கொடுத்து விடுத்தார். அவர் துடித்தழுது துயரமொடு புலம்பி இனிது புனேந்து எடுத்துச் சென்று அருகே வடபால் இருந்த ஆலமரத்தின் அடியில் சந்தன இக்கனம் அடுக்கி அதன் மேல் சதுருடன் கிடத்தினர். உயிர் நீங்கியும் சிங்கம் சீறிய செயலெனச் செயிர் நீங்காமல் பொங்கி மிளிர்ந்து வீரப்பொலிவோடு விளங்கி நிற்கும் இவரது திருமுக மண்டலத்தை நோக்கி ஒருமுகமாக அனைவரும் உள்ளம் கரைந்து உருகி அழுது பரிதாபமாய் ஒலமிட்டு அலறினர்.

விர நாயகா! விண்ணுலகு அடைந்தையோ? என்பார் ; பாரை யாண்டுறு பாண்டியா மாண்டையோ? என்பார் ; மார ம்ைஎனும் வடிவனே 1 மாய்ங்தையோ? என்பார் ;

ஆரவே அழுது அழலினே மூட்டினர் அடுத்தே."

அங்கனம் மூட்டிய தீ மூட்டத்தில் பற்றி மூண்டு எழுங்க பொழுது ஊமைத்துரை உள்ளம் பதைத்து ஓவென்று கதறினர். அண்ணல் மேனியில் அழல் எறவும் அவரது கண்ணிர் மண்ணில் வீழ்ந்து ஒடியது; உடனே உள்ளக் கொதிப்பால் ஊழித் தீ யென உருத்துப் பற்களைக் கடித்து, "நான் திக்குவிசயனுக்குப் பிறந்திருந்தேன் ஆல்ை என் அண்ணனைக் கொன்ற இப் பழிக்கு எண்ணிறந்த பேரை இரையாக்கி இம் மண்ணில் புதைப்பேன்’ என்று கம் கையைத் தரையில் ஓங்கி அறைக்து கண்ணிரைத் துடைத்துக் கடுத்து எழுந்தார். பின்பு ரோடி யாரோடும் பே சாமல் யாதும் புசியாமல் அவல நிலையில் அவசமாயிருந்தார். மறுநாள் தீயை ஆற்றிச் சாம்பலைக் கொண்டுபோய்க் கங்கை யில் கரைத்து வரும்படி தங்கள் இனத்தில் ஒருவனே அனுப்பி விட்டு அங்கு உரிய கடன்முறைகள் யாவும் பரிவுடன் செய்து வந்தார். கொடிய துயரம் எவரிடமும் கெடித நீண்டு நின்றது.