பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பதிபெயர்ந்து வழிஏ கல் பழியாகும்

என்றுமுன்னே பரிந்து சொன்ன மதியிகந்து வெளியேறி வன்கொலையாய்

மடிந்தாயே மதியின் மிக்க அதிபதியே! என்ஆவி அருந்துணையே!

ஆண்டகையே அமிர்கே இங்கே சதிபதியாய் இருந்தஎன்னைச் சதிசெப்து

போயினையே ககவோ கோவேl (9)

ஐயகோ என் அரசை முன்னிழந்து

பின்னிறக்க அடியாள் செய்த வெய்யகொடுக் தீவினையின் விளைவிருக்க

விரகென்னே! விண்ணுேர் வாழச் செய்யவடி வேல் எடுத்த திறல்முருகன் திருவருளும் தீர்ந்த தேயோ வைய மதில் உய்யஇனி வழியுண்டோ

வன்பாவி பழியுண் டேனே. (10) (வீரபாண்டியம்)

என்று இவ்வாறு துடித்து அலமத்து பதைத்து அழுத அரசி திடீர் என்று விரைக்கெழுத்து தன் உயிரை விடுத்திடத் துணிந் தாள். அடுத்து நின்றவர் அலறி ஒடிப் பிடித்துக் கடுத்துக் காங் கிப் பாதுகாத்துக் கவித்து கொந்தார். ஆவியை நீக்க ஆங்காலம் எதிர்நோக்கி அத்தேவி ஏங்கிக் கிடந்தாள். பருவம் முதிர்ந்த தாயும் உருகி புழக்து மறுகி வீழ்ந்து கன்றிழங்க காரா வென்னக் கதறி பழுதாள். உறவினரும் குடிசனங்களும் படுதுயர் மிகுந்து கெடிது புலம்பினர். ஊரெங்கும் பாரிழவாய்ப் பரிதாபமான பேரொலிகளே பெருகிப் பெரிய ஒரு துயர நிலையமா யிருந்தன.

அங் கிலையில் இன்னல் உழந்திருந்த சின்னபொம்மையா என்பவர் செய்யவேண்டிய கடன் முறைகளை யெல்லாம் செய்து முடித்து இரண்டு தினம் கழித்த பின்பு அரச குடும்பத் தைக் கொல்லம்பரும்புக்குக் குடியெழுப்பினர். அதன் பின்