பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 355

அவமதிப்பான இகழ்ச்சிக் குறிப்புடன் இவர் கடுத்துப் பார்த்து கின்ருர் என்று இதில் குறித்துள்ள கனல் அந்த இருவர் மீதும் இவர் கொண்டிருந்த சினமும் சீற்றமும் நன்கு தெரிய வந்தன. அங்கு வந்து கூடியிருந்த பாளையகாரனைவரும் மானமும் விர மும் குன்றி ஈன நிலையில் பணிந்து இழிந்திருக்கின்ருரே! என இவர் எண்ணி வருக்கியுள்ளமை அன்று இவர் கண்ணுேடி கின்ற காட்சியால் காண கின்றது.

எவரும் திகில்கொண்டு அயரும் மரண வேளையிலும் இவர் யாதும் மனம் கலங்காமல் அாக்கு மரத்தை நோக்கிக் கம்பீர மாக நடந்து சென்ருர் என மாற்ருனே வியந்து வெளியே எழு தியுள்ளான் என்ருல் இவரது அருந்திறல் ஆண்மையையும் திருக்திய மேன்மையையும் யார் அளந்து சொல்ல வல்லார்?

கொன்று தின்றுவிட வேண்டும் என்று கன்றிய நெஞ்ச ஞய்க் கடுத்திருந்து காரியம் குழ்ந்து ஊறுபட உயிரைக் குடித்து முடித்த பகைவனே அடுத்து கின்று இவ்வாறு அதிசயித்துப் புகழ்ந்துள்ளமையால் இக் குல வீரரது தலைமையான விரத் திற அம் களராக உறுதி நிலையும் உலையாக ஊக்கமும் உணரலாகும். பிறர் புகழ்ந்த பேசுவதை விட எதிரி வியந்து சொல்லுவ திலிருந்தே ஒருவனது உண்மைத் தன்மை உறுதி பெற உணரப் படுகின்றது. பகைவன் மதித்துப் போற்றுவது அதிசய வகை யாய் அமைந்து ஆன்ற சீர்மையை நன்கு துலக்கி நிற்கின்றது.

"பாரினில் விசும்பில் நாகர் பதியினில் படைகள் சூழ்ந்த போரினில் உயர்ந்து வீரப் புகழுடன் பொலிந்து கின் ருர் யாரினி இவைேடு ஒப்பார் அம்மவோ இராமன் விரம் நேரினில் கண்டார் கேரார் கிலையினே கினேவர் கொல்லோ?"

என முதல் நாள் போரில் இராமனேடு மூண்டு பொருது முரிந்து மீண்ட இராவணன் இலங்கை புகுந்த பின் பரிந்த சிங்தையனுப் அவ் ஆண்டகையின் அருக்திறலை இங்ஙனம் வியந்து சொன் னதே உண்மையான மதிப்புரையாக உலகம் நயந்து கின்றது.

இவ்வாறு எதிரியும் கன்னே மறந்து வியக்கும்படி விளங்கி யிருக்க இல் வீரர் தாக்கு மரக்கை நோக்கிக் செல்லுங்கால்