பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 361

அடங்கி நிற்கும் நிலையை ஒருவரினும் ஒருவர் உரிமையுடன் முந்துற அறிவித்து வங்கனை வழிபாடுகள் புரிந்து கொண்டார்.

பல்லும் நகமும் இழந்த வல் விலங்குகள் போல் பாளைய காரர்கள் யாவரும் எல்லா ஆயுதங்களையும் இழந்து யாதொரு பெருமையும் இலராப் ஏழைமை நிலைமையில் இழிந்து நின்ருர்.

தான் இட்ட கட்டளைகளை யாதும் கட்டாமல் விரைந்து முடித்து இக் காட்டவர் அஞ்சி வணங்கி அடங்கி நிற்பதைக் கண்டு சேனதிபதி கெஞ்சம் களித்து கெடிது கழைத்திருந்தான்.

கட்டபொம்மு ஒழிந்ததே உற்ற காரியங்களுக் கெல்லாம் வெற்றி ஆயது என உள்ளுற உ வந்து உடனிருந்த துரைகளிட மெல்லாம் அவன் பெருமிதமாக உரையாடி வந்தான். வினை முடித்த அவனது வல்லாண்மையை வியந்து இனிமேல் கும்பினி ஆட்சி கொழுந்துவிட்டு ஒங்கும்’ என்று எல்லாரும் குலாவி யிருந்தார். இக் காட்டு அதிசய விரனை வீரபாண்டியன வென்று கொண்டது வெளி நாட்டார்க்குக் களியாட்டமாப் கின்றது. அரிய காரிய சிக்தி பெரிய செருக்கை விளைத்தது.

புலி வேட்டையாடி அதனை வென்று கொண்ட வேட்டை யாளர்கள் அக் காட்டி லுள்ள நரிகளைக் கண்டு நகைத்து நின்றது போல் இந் நாட்டி லுள்ளவர்களை நோக்கிச் சேனபதி முதலாயினேர் சிறுநகை செய்து பெருமிகம் கொண்டு கின்ருர்.

யார்க்கும் அடங்காமல் அடல் மீக் கொண்டு கின்ற அருந்திற லாளனே அடக்கிவிட்டோம் என்று அடங்கா மகிழ்ச்சி யடைந்திருக்க பானர்மேன் பின்பு இங்கு நெடுநாள் அமர்ந் திருக்க வில்லை. இருப்பின் ஆபத்தாம் என அனுமானித்தான். விரகுடன் விரைந்து ஐரோப்பாவிற்குப் போகத் துணிந்து அதற்கு வேண்டியவைகளை யெல்லாம் விநயமாக ஆயத்தம் செய்துகொண்டான். நவம்பர் மாதம் முதல் தேதி (1-11-1799) கன் பதவியை விட்டு வெளியேறிச் சீமைக்குப் பிரயாணமாயி குன். சென்னையில் வைத்து அவனுக்குக் கும்பினி அதிபதிகள் விருந்து முதலியன செய்து சிறந்த வெகுமதிகள் தந்து உவந்து

46