பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

அனுப்பிவைத்தார். அவன் அவரைப் புகழ்ந்து போற்றி விடை பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் சீமைக்குப் போயினன்.

அவனுக்குப் பின்பு மேஜர் ராபர்ட் ட்யூரிங் (Major Robert Turing) என்பவர் சேனபதியாய் அமர்ந்து, கலெக்டர் லவிங்ட் டன் (Lushington) துரையுடன் கலந்து கின் அறு தென்னுட்டுக்

காரியங்களை யாண்டும் நன்கு கவனித்து வந்தார்.

ஒத்து உழைத்தவர்க்கு உதவி புரிந்தது.

இவரைப் பிடித்துக் கொடுத்த புதுக்கோட்டை அரசராகிய விஜயரகுநாத தொண்டைமானுக்குக் கும்பினியார் வரி முழு வதையும் கள்ளி என்றும் திறை செலுத்தாமல் தலைமையான நிலைமையில் சர்வ சுகந்தரமாய்த் தம் இராச்சியத்தை அவர் அனுபவித்து வரும்படி உத்தரவு கொடுத்தார். அவ்வாறே இன் அறும் கடந்து வருகின்றது. அப் பெருங் கொடை இவ் அருக்கிற லாளரை அவர் அகப்படுத்திக் கந்ததில் கும்பினியார் உவந்து கின்றநிலையை உணர்த்தி நிற்கின்றது. தீமையாய்ச் சதி புரிந்தது சேம நிதியாயது. இன்னும் ஒருவர் இங்கு எண்ணிட வுரியர்.

இவருடைய கானுபதியைப் பிடித்துக் கொடுத்து எப்பொ ழுதும் கூடவே யிருந்து ஒத்துழைத்து வக்க எட்டப்ப நாயக்க ருக்குச் சிவஞானபுரம் என்னும் ஒரு கிராமம் கும்பினியாரால் இனுமாகக் கொடுக்கப்பட்டது. அக் கொடை உத்தரவு ஜனவரி மாதம் 22-ந் தேதி (22-1-1800) கலெக்டர் லவிங்ட்டன் துரை மூலம் அவருக்கு வக்கது. அவ் வரவைக் கண்டவுடன் அவர் அளவிட லரிய உவகை புடைய ாய்க் கும்பினியை வாழ்த்தி எவ்வழியும் நலமாகக் குலாம் செய்து கின்ருர்,

அடுத்து உழைத்தவரை உயர்த்தி, உருத்து எதிர்த்தவரை ஒடுக்கிப், படை வலியும் துணை வலியும் பெருக்கி அடலுடன் கின்றமையால் ஆங்கில வியாபாரிகள் ஆட்சி மிகவும் ஓங்க நேர்ந்தது. அந் நிலையைக் கண்டு முன்னம் கலே நிமிர்ந்து கின்ற பாளையகாரர் எல்லாரும் பழைய கிலேமையை அடியோடு இழந்து குடிகளோடு குடிகளாய்ப் புலன் ஒடுங்கி நின்றனர்.