பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 365

தமதுவிளே பொருளுதவித் தனிக்குடிகள்

தழைத்திருக்கத் தரும காடுஎன் அ

இமையவரும் வியந்துளத்த இனி திருந்தது

எங்காடோ இயம்பு வீரே! (4)

(இந்தியத்தாய் கிலே) இன்னவாறு பன்னரும் புகழோடு உன்னத கிலேயில் ஒளி மிகுந் திருந்த இந் நாடு பின்னர் இன்னல் நிலையில் இளிவடைய சேர்க் தது. கால சக்கரம் கடு வேகமாய்ச் சுழன்று வந்தது. அச் சுழ வில் நீதியோடு நெறிமுறை புரிந்து வந்த முடிமன்னர் முடிவாய் மறைந்து போயினர். அயலான தலைமைகள் மயலாய் யாண்டும் கிலவின. கொடுமைகள் மூண்டு நின்றன; கொடுங்கோல் நெடுங்காலம் நில்லாது ஆதலால் கடிகாய் அவை மங்கி மடிக்கன. இறுதியில் ஆங்கிலேயர் ஈங்கு வந்தனர். உலக அறிவில் இவர் தலை சிறந்தவர். நல்ல உழைப்பாளிகள்; யூக விவேகம் உடையவர்; அயராத முயற்சியால் உயர்ச்சிகள் அடைந்தனர். இத் தேசத்தை ஆளும் சிறப்புகள் சேர்க்கன. ஆட்சி நிலையில் மாட்சிமை கண்டனர். சுகங்கா வாழ்வில் கிரந்தரமான பிரியம் உடையவராயிருந்தும் அயல் காட்டை அடைந்ததும் அதன் நிலை மையை நோக்கிக் காம் கலைமையில் அடக்கியாள மூண்டார்.

“Britannia, rule the waves!

Britons never shall be slaves.”

"ஆங்கில தேசம் அலைகடல்களை யாண்டும் ஆளுகின்றது; ஆங்கிலேயர் ஒரு போதும் அடிமைகளா யிரார்' என்னும் இது அவர்க்குத் தேச கீதமாய் (National song) இருந்து வருகிறது. தலைமை வாழ்வை உவந்து அடிமை வாழ்வை இகழ்ந்து பழகி வந்துள்ளனர். சுயாதீனமே சுகவாழ்வு எனத் துணிந்து கின்றனர்.

  • Freedom has a thousand charms to show,

That slaves, howe'er contented, never know.” (Cowper)

"சுவாதீனமான சுதந்கர வாழ்வு ஆயிரக் கணக்கான இனி மைகளை யுடையது; செல்வ வளம் பெற்றுச் சிறந்திருக்காலும் அடிமைகள் அக்க மகிமைகளை பாதும் அறியார்” எனக்

கவுப்பர் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு பாடியிருக்கிருர்,