பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 47

செக்திற் பெருமான் இவரிடமும் இடையிடையே சில அருளாடல்கள் புரிந்துள்ளார். உரிய அன்பரிடம் பரமன் உல் லாசமாய் உறவாடி வருகிருன். நீடிய போருளோடு ஆடிய ஆடல் ஒன்று ஈண்டு அறிய வருகின்ருேம்.

உடைமைகள் யாவும் உடையவனுக்கு உரியன என்னும் உரிமையோடு உரிந்து உதவித் தமது திருநகரடைந்து இவர் பெரு மகிழ்வுடனிருந்தார். பழையன பழம் பொருட்குக் கிழமை மிகத் தந்து கெழுதகைமையோடு வந்து கங்கையும் கம்பியும் அங்கு நிகழ்ந்ததை வியந்து இங்ங்னம் உவந்திருக்கத் திங்கள் சில கழிந்தன. நெடுநாள் இனிதுற ஆய்ந்து தனது அருமை மனேவிக்குப் புதிய மணியணிகள் அதிக விலையில் அமைத்து இவ் அதிபதி அணியலானர். அத்துடன் சிறந்த வயிரப் பதக்கம் ஒன்று உயர்ந்த நிலையில் சமைத்து உவந்தணிந்து துணைவியோடு இணைபிரியாது உளம்மகிழ்ந்திருந்தார்.

அன்று இரவே முருகக் கடவுள் இவர் கனவில் தோன்றி 'உன் மனைவிக்கு அமைத்ததுபோல் என் மனைவி வள்ளியும் பதக்கம் ஒன்று வேண்டும் என என்னைப் படாதபாடு படுத்து கின்ருள்; துரைச்சி அணிந்ததுபோல் குறத்தியும் அணியப் பார்க்கிருள்; அரிய விலையுடைய அதற்கு ஆண்டியாகிய நான் எங்கே போவேன்? பாண்டியா!' என்று வேண்டி மறைந்தார். அயர்ந்து உறங்கி யிருக்க இவர் வியந்து விழித்து அமளியில் அருகே உடன் கழுவிக் கிடக்க மனைவியை எழுப்பிக் கனவு நிலையை உரைத்தார். அகனேக் கேட்டவுடனே அவள் உளமிக உருகி இருகை குவித்து 'முருகநாதன் நம்மீது வைத்துள்ள பேரருள் கிலே என்னே!” என்று பெரிதும் து தி க் து க் தன் மார்பில் அணிந்திருந்த அந்த மணியாரத்தை விரைவில் எடுத்து நீராட்டி இது வள்ளிக்காய்க்கு” என உள்ளமுவந்து பாராட்டி ஒரு பேழையில் அமைத்து, விடிக்கவுடன் பல்லக்கில் வைத்துச் செந்திலம்பதிக்கு அனுப்பிச் சிங்கை ம கி ழ் ந் தி ரு ந் த ஸ். அவளது உள்ளப் பண்பை வியந்து இவ் வள்ளலும் புகழ்ந்து உவகைமீதார்க் து உழுவ லன்போடு கழுவி ஒழுகி வந்தார்,