பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 49

வழிப்போக்கர்க்கு இடையூருகக் கடை செய்துள்ள இக் கொப்பு ஒடியப் பாடமுடியுமா?” என்று அருகில் நின்ற அப் புலவரை உல்லாசமாக வினவினர். உடனே அவர் முருகனே உருகி நி னே ங் து 'எப்படியும் இப்புளியங் கொப்பொடிய வேண்டும் குருபரா' என்ருர். அப்பொழுதே நெறுநெறென அது இடைமுறிந்து விழுந்தது. விழவே அரசர்விரைந்து இறங்கி அவரைத் தழுவி வியந்து அழகிய பொன்மாலே ஒன்றை அவரது கழுத்திலிட்டுப் புகழ்ந்து கின்ருர். அவரிடம் பல உத்தம குணங்கள் நிறைந்திருக்கமையே இத்தகைய சித்தியடைதற்குக் காரணமாயிருந்தது. "தாரத்தைத் தாரம் என்பேன் மற்றை மாதரைத் தாயர் என்பேன், சூரைத் துளைத்தவன் ஆணை” என ஒருமுறை பாரறிய அவர் பகர்ந்து கின்ருள். இதல்ை அவரது உள்ளப் பான்மையும், ஒழுக்கத்தின் மேன்மையும் நன்கு உணர லாகும். இந்த அரிய விரத ஒழுக்கக்கை வியக்து முருகதாச சுவாமிகள் அவரை மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார்.

முதலில் துறவு நிலையை மேற்கொண்டிருந்து, பின்பு உள நிலைதிரிந்து மங்கையரை மருவி மயலோடு வாழநேர்ந்த சிலரைக் குறித்து இவ் விரதசிலரது நிலையோடு பொருத்தி அச்சுவாமிகள் குறிப்பாக இகழ்ந்திருக்கிரு.ர். அடியில் வருவது காண்க.

"தாரமன்றி மற்றைத் தையலரை யெல்லாம் ஈரமுறுதாய் என்றே என்றும் கினைப்பேன் இதுமெய் சூரற்செகுத்தோன் ஆணை” என்னும் ஒருபாச் சொன்னன் பாரதனிலிவ் விரதம் பலரும் கொளற்பாற் றன்றே, (1) அந்தவிதி அன்னவனுக்கு அமையத் தலையில்எழுதிக் கந்தமலர்மேல் வாழும் கடவுள் கரங்கள் தழைக; இந்தவுலகை வெறுத்திட்டிரந்துண்டு அதன்பின் மடவார் பந்தஞ் சிலருக் கெழுதும் பனவன் கரம் இற்றுகவே.” (2) பனவன் = பிரமன். (புலவர் புராணம்) ஒழுக்க கிலையிலுயர்ந்து விழுப்பேறுடையராப் அப்புலவர் உறுதி செய்திருந்த வுண்மை இதல்ை இனிதறியலாகும். இக்கவாறு

7