பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 51

பேரறிவுக்குப் பயன் ஒரறிவுயிர்க்கும் ஊறு நேராவகை ஒம்பி வருதலே' என உறுதிபெற உரைத்து, மேலும் பல உணர்த்தி, அவர் குறுமொழியாடிச் சிறுமை கொண்டு நின்றதை இளித்து வெறுத்தார். அவர் உள்ளம் நாணி உணர்ந்து திருந்திப் பின்பு குறுகிய கோக்கை விட்டு மறுமை நோக்கோடு மருவி யமர்ந்து உரிமைமீக்கொண்டு உறவாடி நின்ருர். பிழைகள் கண்ட இடத் துக் கடுமையாக இடித்துரைத்து, அடுத்தவரை அனைத்து ஆக ரித்து, உண்மையும் திண்மையும் உடையராப் யாவருக்கும்.உறுதி நலங்களைச் செய்தருளிக் கள்ளம் முதலிய அல்லல்கள் யாதும் கம் காட்டில் அணுகா வண்ணம் இவர் ஆராய்ந்து காத்தார்.

தங்தையின் பிரிவு.

இங்கனம் காத்து வருங்கால் தந்தையார் காலமாயினர். ஆனது 1-2-1791ல் என்க. திக்குவிசயத்துரை என எத் திசையிலும் இசைபெற்று கின்ற அவ் வீர வேந்தன் பிரிந்ததை அறிந்து காடும் நகரமும் நைக்து புலம்பின. இவர் பெரிதும் வருக்தி மறுகி கொந்து உரிய கடன்களை உறுதிபெறச் செய்து உள்ளம் தேறிப் பின்பு அரசை அன்போடு ஆதரித்து வந்தார்.

ஆட்சியின் மாட்சி.

இவ் ஆண்டகையின் ஆட்சித் திறம் பாண்டிமண்டலத்தில் பதிக்கிருந்தாலும் மறுபுலம் எங்கனும் மாட்சி நீண்டிருக்கது. எல்லாரும் வியந்து புகழ வல்லாண்மை புரிந்து இவர் இசை பெற்றிருந்தார். நல்லோரை நாடிப்பேணித், தீயோரை மாய அாறி அளியும் கெமலுமுடையராப் ஒளிசெய்து வந்தமையால் இவரது ஆணே யாண்டும் ஆண்மையுற்று நின்றது. அறநெறி யுடையார் அமிர்தென அ னு கி ன ர்; பிறநெறியுடையார் பெயர்க்த கடுங்கினர்; கஞ்சமென நின்றவர் கழைத்து வந்த னர்; வஞ்ச செஞ்சினர் நஞ்சென அஞ்சினர்; புலையும் களவும் பொய்யும் பொன்றின. கலை நலங்கள் எங்கும் கலித்தெழுந்தன; பொல்லாத நிலைகளில் பழகியிருந்தவரும் உள்ளம் திருக்தி நல்லவ ராப் ஒழுகிவர இவ் வல்லவர் வழிமுறைகளை வழங்கி வந்தார்.