பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

'குற்ற முள்ளார் குலேநடுங்கக் குணமுடையார்

உளமகிழக் கோவின் செங்கோல் பற்றியிவன் பாராண்டு பண்புபா

ராட்டிவரும் பான்மை நோக்கி மற்றமறு புலத்துயர்ந்த மன்னவரும்

மனமகிழ்ந்து மாண்பு செய்ய வெற்றிமிகு திருவோடு வீரமிகு

பாஞ்சையினில் விளங்கி நின்ருன்." என உலகம் எங்கும் இங்ஙனம் உளங்கனிந்து கூற அரசியல் நெறியில் இவர் துலங்கி வந்தார். இன்னவாறு உன்னத நிலையில் மன்னி நின்ற இவர் முன்னேர் செய்துள்ள கரும நிலையங்களை நன்கு பேணி வந்ததோடு காமும் அருமையான பல திருப்பணிகள் இயற்றி அற நலங்களை யாண்டும் ஆர்வ மீதுணர்ந்து புரிந்து யாரும் இன்புற நீர்மை சுரந்து சீர்மையோடு ஆகரித்திருந்தார். பேரும் புகழும் பெருகி வந்தன.

தரும கிலேயங்கள்.

ஆழ்வார்திருககரியில் சுவாமி சங்கிதி முன்பு ஒரு அழகிய மண்டபம் அமைத்து வைகாசி உற்சவங்தோறும் எழாக் திருநாளில் பெருமாளே அங்கு எழுந்தருளச்செய்து பூசனை புரிந்து வரும்படி போற்றி வைத்துள்ளார். அத்தெய்வ காரியம் செவ்வையாப் கடந்து வருவதற்காக வெள்ளமடம் என்னும் கிராமத்தில் இருபத்தேழு கோட்டை விதைப்பாடு இனமாக உதவி யிருக்கிருர். சில வேதியர்க்கு மாத வேகன மும், நாளும் பலருக்கு அன்னகானமும் கல்கி யருளினர். சங்கிதியில் தீர்த்தம் முதலிய மரியாதைகளை முக்துற உவந்து செய்து, தேர் ஒட்டத்தன்று முன்னதாக இம் மன்னன் வடம் தொட்ட பின்னரே அது பேர்ந்து செல்லும் உரிமையைப் தலத்தார் ஒர்க் து செய்துள்ளார். அத்தலத்தில் அமைத்த அம் மண்டபத்தில் இதுபொழுது வேக அத்தியயனம் நடந்து வரு கின்றது. நீதி வித்தகன் நிலையங்கள் எங்கும் நிலவியுள்ளன.