பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

பாஞ்சையின் பான்மை.

இது 96 கிராமங்களையுடையது. சில கிராமங்களில் உள் ளடங்கிய பல ஊர்களும் உண்டு. அவை ஆறு வணிகங்க ளாகப் பகுக்கப்பட்டிருந்தன. செவுனகிரி வணிகம், பசுவந்தன வணிகம், புதியம்புத்துனர் வணிதம், ஆதனூர் வணிகம், வேடத் தம் வணிகம், பட்டணமருதார் வணிதம், என வகுத்து வரன் முறையாக ஆண்டுவந்தனர். வணிகம்=பகுதி, பிரிவு. இவ் ஆட்சியுடன் தலம் காவல், திசை காவல் என இரண்டு உரிமை கள் இவர்க்கு இசைந்திருக்கன. கலம் காவல் என்பது கபா வின் கிராமங்களின் பாதுகாப்பு. திசை காவல் என்பது ஜில்லா முழுவதும், எல்லைப் புறமும் பாதுகாத்து நிற்பது. இவ்விரண் டிற்கும் முறையே குடிகளிடத்தும்,அவ்வவ் அதிபதிகளிடத்தும் வரி வசூலித்துக் கொள்வர். ஆரவாய் மொழிவரையும் இருந்த திசை காவலுக்காகச் சேரர் அதிபதிகள் வருடந்தோறும் பெரியதொரு தொகையை இவர்க்கு அனுப்பி வந்தனர். அ6 விருவகை வருவாய்களைக் கொண்டு பொருபடைகளை இவ பேணி வந்தார். தகுதியான விரர்களை ஆங்காங்கு வைத்து, தலம் காவலை கலங்கான ஆற்றினர். திசை காவலைத் தமது ஆணையின் திறலால் மானுறப் புரிந்தார். வழிப்பறி, கொள்ளை, கள்ளம் முதலிய பொல்லாச் செயல்கள் யாண்டும் புல்லாதபடி எல்லா இடங்களையும் இனிது நோக்கி நாட்டை இவர் நன்கு போற்றி வந்தார். எங்கேனும் இடையூறு நேர்ந்ததாயின் இவர் க்கு அது விரைந்தறிவிக்கப்படும், படவே உடனே அது சேர்ந்த வகையைத் தேர்ந்து, நீதியோடு ஆராய்ந்து, செய்த பிழையாள ரைத் தண்டித்து மீண்டும் அது நேராவண்ணம் ஒர்ந்து முறை புரிந்து உறுதி செய்து அருளுவர். இத்துடன் மேற் குறித்த முப்பது பாளையகாரரிடமிருந்து உரிய பருவங்களில் திறைகளைத் தொகுத்து ஒரு சிறு பகுதியைத் தாம் எடுத்துக் கொண்டு மீதத் தைத் திருச்சியிலிருந்த சாதிகான் மூலம் ஆர்க்காடு கபாவுக்கு அனுப்பி வந்தார். இவ்வாறு மரபுநிலை திரியாமல் வரன்முறை

=