பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

அடைந்தாரை ஆதரித்தது.

மெலியரை வலியரும், வறியரைச் செல்வரும் நலிவு செய் யாதபடி யாண்டும் அளிசெய்து கின்று முறை புரிந்து வந்த இவரிடம் நாளும் பலர்வந்து குறையிரக்து கின்று குணமடைந்து சென்ருர். அடைந்தவர் எவராயினும் அவரை ஆதரித்தருளுவது

இம் மன்னனது வழக்கமாய் மன்னி நின்றது.

"இடைந்தவர்க்கு அபயம் யாம்என் றிரந்தவர்க்கு எறிர்ேவேலே கடைந்தவர்க் காகிஆலம் உண்டவற் கண்டி லீரோ? உடைந்தவர்க் குதவாயிைன் உள்ளதொன்று ஈயாயிைன் அடைந்தவர்க்கருளானுயின் அறம்என்னும்: ஆண்மைஎன்னும்?"

என்னும் இவ் உன்னதமான உறுதி நிலையை உள்ளங்கொண் டிருந்தார் ஆதலால் உதவி நாடி இவ் வள்ளலிடம் வந்தவர்க் கெல்லாம் எள்ளலின்றி இடையூறு நீக்கி இகம் புரிந்து வந்தார். இம் மன்னனுடைய முன்னே ரெவரும் இன்னவாறே இன்னல் ஒழித்து ஏழைகளே ஆகரித்துத் யாவரிடமும் தோழமையோடு கோள்வலிகாட்டி நாளும்கலம்புரிந்து நாடுஆட்சிசெய்துள்ளனர்.

பலி விலக்கிப் பாதுகாத்தது.

மதுரை மா.நகரில் திருமலை நாயக்கர் கமது அரண்மனை யைக் கட்டத் தொடங்கியபொழுது தென்திசைச் சுவர் நன்கு அமைந்து நேரே நின்று திகழாமல் நிலை சிதைந்து வந்தது. அந் நிலையினை கிமித்திகன் ஒருவன் நுனித்து நோக்கிப் பூகம் புகுந்து எதம்புரிகின்றது; இதற்கு நரபலிஒன்று இடின்கலமாம்' என்ருன். அறநல முடைய அந்த அதிபதி அம் மறநிலைக்கு இசையாமல் முதலில் மறுத்து உரைத்தார். பின்பு விதிமுறை செய்வதால் பழுதில்லை என்று வேதியர் சிலர் அவரிடம் ஒதி கின்றமையாலும், வேறுவழி யில்லாமையாலும் அவர் சரிஎன்று இசைந்தார். இசையவே களகர்த்தர் சிலர் பல இடங்களிலும்

தேடி எளிய மக்களாகிய சக்கிலியர் இருவரைப் பற்றிவங்கார்,