பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

அ ர சைக் க ண் ட து.

அவன் வெளியே வந்து அங்கு கின்ற வெள்ளேயரைக் கண்டு அளியோடழைத்து வழியே உட்சென்ருன். அரங்க மாலுட் புகுந்து ஆலன்துரை அரசைக் கண்டார். இவர் உவந்து உபசரித்துச் சிறந்த ஆகனத்தில் அ வ ை இருக்கும்படி பணித்தார். இருந்த அவர் இவரது உருவத் தோற்றத்தையும், பெருமித நிலையையும், அகன்று பரந்து விரிந்து நிவந்த மார்பை யும், திரண்ட தோள்களையும், வீரப்பொலிவோடு விளங்கி யிருக்கும் திருமுக எழிலையும் ஒருமுகமாக விழைந்து நோக்கி உள்ளுற வியந்து உவந்து நின்ருர். அவரை இவர் பலநாள் பழகிய கிழமையாளர் போல் பண்போடு பார்த்து தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு வந்த காரியம் என்ன? யாது செய்ய வேண்டும்?' என அன்புடன் வினவினர்.

வரி வகை யுரைத்தது.

அவர் யாவும் உரைத்தார்: “இத் தேசம் கம்பெனியாரிடம் வந்துளது; பாளையகாரர் யாவரும் கப்பம் கட்டி வருகிருர்கள்; தங்களது மட்டும் வரவில்லை, பாக்கியாயுள்ளது. ஆறு ஆண்டுகள் ஆயின; வேறு ஜமீன்தார்களுக்கு விதித்தது போல் தங்களுக்கு வரி விதிக்கவில்லை; சிறிதே வகுத்துளது; இங்கு மறுத்தால் எங்கும் இடையூரும்; * சங்க உரிமைக்கும் பங்கமாகும்; الے ٹائپ’’ வருடங்களுக்கும் சேர்த்து ஆருயிரம் பொன் கொடுத்தால் போதும்; குணம் பொருக்தி இணங்கி அருளின் இருதலையும் இனிமையாம்; இதனை உறவுரிமையோடு எங்கள் அதிபதிகள் உங்களிடம் உரைத்து வர விடுக்கார்; உவந்து வந்தேன்;

உணர்ந்து உதவ வேண்டும் ' என அவர் நயந்து உரைத்தார்.

சங்கம் என்றது இங்கு கம்பெனியை. பலர் கூடி வாணிகம் செய்த கட்டம் ஆதலால் Company என நின்றது. கம்பெனி என் னும் ஆங்கிலமொழிக்குக் கூட்டுறவு என்பது பொருள். அது, தமிழில் கும்பினி என வழங்க வந்தது. கும்பினியார்-வர்த்தக சங்கத்தார்.