பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மந்திராலோசனை 79

வள் அளவு இடங் கண்டாலும் வெள்ளையர் உள்ளே மண்டிக் கொள்ளைகொண்டு நிற்பராதலால் அவரை இங்கே குடிகொள்ள விடலாகாது; அடியோடு அகற்றவேண்டும்' என்று கம் உள்ளம் கொண்ட நிலையைப் பிள்ளை உரைத்தார். அவர் சொன்னவை யாவும் மன்னன் கேட்டு மதியுடன் ஒர்ந்து அயலே நோக்கினர். அகன் பின்பு சின்னபொம்மையா என்பவர் நேரே எழுந்தார்.

சின்னபொம்மையா சொன்னது.

அரசின் சிறிய தந்தையும், நல்ல அறிவாளியுமாகிய சின்னபொம்மையா எழுந்து மன்னனநோக்கி இன்னுரை யாடினர். ‘அரசே இடம் காலம் வலி முதலியவற்றை நலமுற ஆராய்ந்து நாம் வினை செயல் வேண்டும். காலத்தின் கோலம் கணித்தற்கரியது; அது, ஆலத்தை அமிர்கம்ஆக்கும்; அமிர்தத்தை ஆலம் என மாற்றும். இன்ன காலத்தில், இன்ன இடத்தில், இன்னுருக்கு இன்னது கடக்கும் என முன்ன்றிக் து முடிவுறச் சொல்லுதல் யார்க்கும் அரிது. நேர்ந்தபொழுதுதான் யாவும் ஒர்ந்து கொளலாகும். காலவேற்றுமையால் எல்லாப் பொருள் களும் கலங்கி வேருகும். மெலியவர் வலியராய், வலியவர் மெலியராய்ச், சிறியவர் பெரியராய், வறியவர் திருவராய், திருவினர் எளியராய்த் திரிந்து வருதலை உலகில் அறிந்து வருகின்ருேம். வெளிகாட்டிலிருந்து வந்தவர்என்று எளிமையாக நினைந்து வெள்ளேக்காரரை நாம் எள்ளலாகாது. அவர் அரும் பெரு முயற்சியால் பெரும்பொருள் ஈட்டி அரசுரிமையடைந்து அதிலிருந்து வரும்படி பெருக்கவிரும்பி வரிகளை வகுத்து உரிமை நிலைகள் ஓங்க ஆங்காங்குத் திறம்பட அமர்ந்து உரம்பெற முயன்று உறுதி செய்து வருகின்ருர். அம்முறையில் சம்மிடமும் வந்துள்ளார்; வரினும் நமது இடத்தின் இயல்பையும் பழமை யையும் இனிதாக எடுத்துக்காட்டின் அவர் அறிந்து அமர்ந்து முன்போல் நாம் இருந்துவரும்படி நம்பால் அன்போடு இணங்கி நிற்பர். அங்ஙனமின்றிப் பதிபெயர்ந்து அயலிருந்து வந்தவர்