பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மந்திராலோசனை 83

மு. டி. வு ைர ,

விேர் இதுவரை உரைத்துவந்தன யாவும் ஒவ்வொரு வகையில் உண்மை யுடையனவே. வெள்ளையர் மேல் நாம் எள்ளளவும் இகல்கொள்ள வில்லை. அவரே முந்துற எம்மை இகழ்ந்து நிற்கின்ருர். பாளையகாரர் அனைவரும் பணிந்து திறை தந்தார்; நான் மாத்திரம் வந்து பார்க்கவில்லை என்று சிங்தை திரிந்து செற்றம் கொண்டு அற்றங்கண்டு குற்றங் கொழித்துக் குறைகள் பல பேசுகின்ருர். துடுக்கன், மிடுக்கன், கலகக் காரன் என இன்னவாறு இழப்பம் ஏற என்னை இகழ்ந்து வருகின்ருர். புதியராய் இங்கு அடைந்தவர் நம்மை நேரே வந்து பார்த்திருக்கலாம்; அன்றெனின் அவரை வந்து பார்க்கும்படி அன்பாக ஒரு முடங்கல் அனுப்பியிருப்பினும் யான் போய்ப் பார்த்திருப்பேன்; யாதும் செய்யவில்லை. அழையாதவரிடம் வலியப்போய் யான் நுழைவது ஏன்? இதுவரை எவரையும் போய்ப் பார்த்த வழக்கமு மில்லையே. கி. பி. 1639ம் ஆண்டில் எம்போன்ற மன்னவனை சென்னவ நாயக்கரிடம் சிறிது நிலம் யாசகம் வாங்கிக் குடியிருந்து வந்தவர் நாளடைவில் வளர்ந்து சின்னளின் முன் இந்நாட்டுரிமையை யடைந்தார். நான் பரம்பரையான மன்னர் மரபில் வந்துள்ளேன். என்னை அவமதித்தால் இது என்ன மதி? நேற்று வரையும் உப்பும் மிளகும் விற்று வந்தவர் இன்று இப் படி அடைந்து இப்படி கிமிர்ந்தால் எப்பொழுதும் அரசுரிமையை யுடைய யான் எப்படி நிமிரேன். இதனை எண்ணி நோக்காமல் மனம்போனபடி புரிந்து வம்புகள் பேசி வருகின்ருர். குடல் வளர்த்த பசிக்கஞ்சி இங்கு உடல் வளர்க்க வந்தவர் கம் பழைய நிலைமையை மறந்து எம்மைப் பிழைகள் மிகப் பேசுகின்ருர்; இனி யான் யாதும் பொறுத்திரேன். எவ்வகையிலும் அவரை எதிர்த்தே தீர்ப்பேன் என்று அறுதியிட்டு ம ன் ன ன் உறுதிபெற வுரைத்தான். அங்கிருந்தவர் எவரும் எதிர் ஒன்றும் பேசாமல் சரி யென்று இசைந்தார். அவ்வளவில் ஆலோசனை முடிந்தது. அரசன்எழுந்த வுடன் அனைவரும் எழுந்து தத்தம் இடங்களே அடைந்தார்.

_.