பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கும்பினித் தலைவர் கூடி ஆய்ந்தது 87

கேட்டு ஈயத்து கின்ருர். இன்னவகையே அங்கு மன்னியிருந்தவ 1%னவரும் இம் மன்னவன் மறுத்துள்ளதைக் குறித்துத் தத்தம் கருத்தக்களைத் திருத்தமுடன் விரித்துத் திறம் பெற வுரைத்தார். முடிவில் வெபு (Joseph Webb) எழுந்து விநயமாய் மொழிக்கான். வெபு விளம்பியது.

இவன் சிறந்த மதியூகி. பெரிய ராஜதந்திரி. சங்கத்தின் காரியங்களை யெல்லாம் நன்கு கவனித்து நலம்பல புரிந்தவன். ஆட்சியின் அதிகார முறையில் அவ் அமையம் அங்கு இவன் காரியதரிசியாப் (Secretary) அமர்ந்திருந்தான். சொல்லாடலில் மிகவும் வல்லவன்; நல்ல கோக்கமுள்ளவன். இவன் எழுந்த வுடனே எல்லாரும் எ திர்நோக்கி ஒருமுகமாய்க் கவனித்திருக் தார். இவன் உரையாடலானன்: 'பெருந்தகையீர்! குறித்த கருமத்தைப் பற்றித் தங்கள் கருத்துக்களைப் பெரியோர்கள் இதுவரையும் திருத்தமுற விளக்கினர்கள். அவை யாவும் கலை அறிவும் உலகியலுணர்வும் அனுபவ நிலையும் அமைந்து ஒவ் வொரு வகையில் உறுதியுடையனவா யுள்ளன; ஆயினும் அபிப்பிராய பேதங்கள் தம்முள் அமைந்து கிற்கின்றன. உருவங் களில் வேற்றுமையிருத்தல் போல் உள்ளுறும் எண்ணங்களிலும் வேறுபாடுகள் பெரிதும் உள்ளன. எல்லாவற்றையும் ஒருமுகப் படுத்தித் துருவி நோக்கி உண்மை தெளிந்து உறுதியை மேற் கொள்ள வேண்டும். அரசாளுதல் அரிய பெரிய ஆண்டகைச் செயல். அது தெய்வீகமானது. உலகத்தை நிலை குலையாமல் காத்துப் பலவகையிலும் கலமுற காடி உயிர்களை செறிமுறை ஒழுக்கித் தலைமையோடு நிலவி நிற்றலால் அரசன் கண் கண்ட தெய்வம் என்று எண்ணப் படுகிருன். அத்தகைய சிறந்த அரச பதவியைத் தெய்வாதீனமாக நாம் அடைந்திருக்கிருேம். . வியாபாரிகளாகிய நமக்கு இந்த அரிய பெரிய தேசவுரிமை வலியக் கிடைத்தது. ஆயினும் இப் புதிய பாக்கியத்தை நாம் எளிதில் அடைந்து விடவில்லை. அளவிடலரிய அல்லல்கள் பல அடைந்து அவற்றையெல்லாம் கடந்த இது பொழுதுதான்