பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

மெல்லத் தலசீட்டி யிருக்கின்ருேம். முதலில் போர்த்தக் கேசிய 'ரும், பின்பு டச்சுக்காரரும், அதன்பின் பிரெஞ்சுக்காரரும், இறுதியில் ஆங்கிலேயராகிய நாமும் முறையே வணிகமுறையை நாடிப் பிழைக்கும் பொருட்டு இங்கு வந்து சேர்ந்தோம். உழைத்தோம். முன்குறிக்க மூன்று வகுப்பினரும் வர்த்தகப் பொருமையால் நமக்கு இழைத்து வந்த இடையூறுகள் அள விடலரியன. அவற்றை எண்ணி நோக்கின் எண்ணில் அடங் குமா? அவருள் பிரஞ்சினர் வெகுண்டெழுந்து வெம்போர் தொடங்கி நம்மை அடியோடு இங்கிருந்து குடியெழுப்பிவிடக் கொதித்துச் செய்த கொடுமைகள் இ ன் று நினைப்பினும் வயிற்றைப் பற்றி எரியுமே. இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் நேர்ந்த பாரிசின் (Paris) உடன்படிக்கையால் அவர் ஆற்றிவந்த அல்லல்கள் ஒருவாறு அடங்கி கின்றன. அவ் இடறுகளையெல்லாம் கடையற நீக்கி நாம் இந்த நிலையில் நிற்கும்படி செய்த நம் குல வீரர்களாகிய *1. கிளைவ் (Clive) 2. வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) 3. காரன்வாலிஸ் (Lord Cornwallis) முதலிய பெரியோர்களுக்கு நாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிருேம். அருந்திறலோடு கின்று பெரும்பாடு பட்டு கம் முன்னேர் வருக்திப் பெற்ற இத் தேச ஆட்சியைப் பெருக்தகவுடனிருந்து நாம் பேணி வர வேண்டும். தென்னுட்டுரிமை வந்து சில ஆண்டுகள் தாம் ஆகின்றன. முன்னும் பின்னும் அறியாத இடத்தில் வீணே முனைந்து கலகத்தை விளைக்துவிடக் கூடாது. எங்கும் அமைதி

  • 1. இவர், இந்தியர்வை ஆங்கில ஆட்சிக்கு முதலில் உரிமை

யாக்கிய அருங்கி, லாளர். 1765ல் வங்காளங் கவர்னராகவும், சேதிை பதியாயுமிருந்து திறமுடன் உழைத்துத் தீரங்கள் செய்தவர்.

2. இவர், 1774 லிருந்து 1785 வரை வங்காளத்தில் கவர்னா யும், கவர்னர் ஜெனரலாயும் அமர்ந்து வெள்ளேயர்களுக்கு வேண் டிய கலங்களே விளேத்து யாண்டும் அருந்திறல் புரிந்து வந்தவர்.

3. இவர், 1786 முதல் 1793 வரை அரசப்பிரதிநிதியாய் நின்று ஆட்சிக்கு இதமா அருந்துணே புரிந்தவர். பெருந்திறலுடையவர்.