பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாவது அதிகாரம்

ஜாக்சன் சந்திப்பு.

சிறந்த சேனைப் பாதுகாப்போடு தென்னுட்டின் அதிபதி யாப் வங்க ஜாக்சன் இக்காட்டின் இயல்புகளையும், நிலைகளையும் இடங்கள் தோறும் அமர்ந்து நின்று திடம்பெற ஆராய்ந்தான்.

பாண்டி நாட்டின் பழைய நிலை.

இப்பொழுது உள்ளது போலத் திருநெல்வேலி, மதுரை, இராமகாகபுரங்களைக் கணித்தனி ஜில்லாக்களாக அப்பொழுது வகுத்து வைக்கவில்லை. பாண்டிய மண்டலத்தைப் பல பிரிவுக ளாகப் பிரித்துப் பாளையகாரர் பலர் ஆண்டுவந்தார் ஆதலால் வேண்டியவாறு ஒரு முகமாவரம்பு செய்யாதிருந்தது. அந்நிலை யில் அவன் திருநெல்வேலியை அடைந்து படைவலியுடன் அரண் செய்துகொண்டு பருவம் நோக்கியிருந்தான். அங்கனம் இருக்குங்கால் ஜமீன்தார்களெல்லாரும் அவனே வந்து பார்த்து வணங்கிச் சென்ருர். அவருள் எட்டையாபுரம் ஜமீன்தாராகிய எட்டப்பநாயக்கர் அடிக்கடி வந்து ஒட்டி நின்று மிகவும் உரிமை யாளராய் உறவுகொண்டாடி உவகை யுரையாடி உறுதி குழ்ந்து போனர். அங்கனம் போங்காலம் இக் கட்டபொம்முமீது அடாப்பழிகள் பல விடாப்பிடியாகப் படைத்துக்கூறினர். வெள்ளேயர்களை மிகவும் எள்ளி இகழ்கின்ருன்; குடிகளிடம் கொள்ளை செய்கிருன்; கொடுமையாக எங்களுக்கு என்றும் அல்லல் புரிகின்ருன்; உங்களுடைய எல்லையை மீறித் தொல்லை களே விளைத்து அல்லும் பகலும் அடலே கருதி நிற்கின்ருன்; இப் பொல்லாதவனே உடனே அடக்கி ஒழியாவிடின் உங்கள் கும் பினி ஆட்சி இனி இங்குச்செல்லாது; எங்கும் கில்லாது” என இன்னவாறு பல பல பன்னிப் பதம்பெற கின்று இதம் பெறச் சென்ருர். அடுத்தடுத்து மொழிந்தமையால் அவனும் மனம் மிக