பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ஜாக்சன் குற்ருலம் கூடாரம் கொண்டது.

வாரம் ஒன்று ஆகியும் தன்னை நேரே வந்து பாஞ்சை மன்னன் காண வில்லையே என்று கடுத்திருக்க அவன் அடுத்து அகம் திரிந்தான். கிங்தையாகத் தன்னை அவமதித்துள்ளான் என்று சிங்தை கனன்று இவர்மேல் அவன் சீறியிருக்கும் பொழுது கோளர் சிலர் இடையே புகுந்து கோள்களும் மூட்டினர்; 'கட்டபொம்மு மிகவும் பொல்லாதவன்; யார்க்கும் அடங்கான்; எவரையும் ஒரு பொருளாக எண்ணுன்; உங்கள் கடிதத்தையும் அவமதித்துக் கர்வமுற்றிருக்கிருன். கொடிய திறலுடையனுப்ப் படிமுழுதும் கானே ஆள அடி கோலி நிற்கின்ருன்; வெள்ளைக் காரரை மிகவும் எள்ளலாக எண்ணி இகழ்ந்து வருகின்றன். வரி என்பது என்றும் உங்களுக்கு ஒன்றும் காரான். உடனே அடுபடைகளுடன் வந்து விரைந்து அடக்கினலன்றி அரசுரிமை யையிழ்ந்து நீங்கள் அகன்று போகவே நேரும்” என இன்ன வாறு பல இன்னலுரைகள் ஏறின. அச்சொற்களைக் கேட்டுப் பற்களைக் கடித்து அவன் பரிந்திருக்கான். பின்னர் இம் மன்னர் நெல்லையை நோக்கி வருவதை அறிந்து முன்னதாக ஒல்லையில் புகுந்து உள்ளுறும் விர கோடு உளந்திரிய மொழிந்தார். 'முரண் கொண்டிருந்த அவன் இப்பொழுது திரண்ட படைகளுடன் சேர்க் து இங்கே காணவருவகாகக் கடுத்துவருகின்ருன். கருத்து கிலேயாதோ? திருக்கமுறக் தெரிந்து கொள்ளவேண்டும்' என்று அத்துரையின் சிங்தை திரிய விங்கையுற கின்று அவர் முக்தற வுரைத்தார். படை என்று கேட்டவுடனே அவன் கொஞ்சம் குடல் கலங்கினன். இனி இங்கிருந்து பேட்டி செய்யலாகாது; வருகின்றவன் ஊர் அருகேயுள்ளது; கருமம் சரி அன்று என்று கருதி ஆய்ந்து உரிய துணைகளுடன் முதல் நாள் பிற்பகலில் குற்ருலத்துக்கு முகாம்செய்து போயினன். அங்ங்னம் போகும் பொழுது கட்டபொம்மு வந்தால் குற்ருலத்துக்குக் கனியே வந்து என்னைக்கண்டு போம்படி சொல்லும்' எனக் காரியா லயத்திலுள்ளவர்களிடம் அவன் விரகோடு உரைத்துக் கரவோடு சென்ருன். அவனது போக்கு புன்மை நோக்கி நின்றது.

-