பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.0 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் புல்லிய புலையில் இழிந்து போகாமல் நல்ல நிலையில் உயர்ந்து வருபவர் நரர்களுள் தேவராய்ச் சிறந்து திகழ்கின்ருர். சிறப் பெல்லாம் இருதய பரிபாகங்களால் இனிது மிளிர்கின்றன. இனிய நீர்மைகள் தனியான சீர்மைகளாய்த் தழைத்து வருக லால் அவை யாண்டும் எவராலும் புனிதமாகப் போற்றப்படு கின்றன. சத்தியம் தருமம் கருணை வீரம் என்பன தெய்வ மணம் கமழ்கின்ற திவ்விய குணங்களாம். இந்தப் பண்புகள் கோப்ந்த அளவு மாந்தர் மகான்களாய் மகிமை பெறுகின்றனர். ஒத்த பிறப்பினர் ஆயினும் சித்தம் உயர்ந்தவர் மக்களுள்:சிறந்து விளங்குகின்ருர். ேம ன் ைம க ள் யாவும் பான்மைகளால் மேவுகின்றன. அரிய தகைமைகளில் பெரிய மகிமைகள் பெருகி வினேகின்றன. குனகலங்கள் உயர்நிலைகளை அருளுகின்றன. கல்வி தறுகண் இசைமை கொடைஎனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான் கே. (தொல்காப்பியம்) என ஆசிரியர் தொல்காப்பியனர் பெருமிக நீர்மைகளை வரையறை செய்து ஒருமுகமாய் இவ்வாறு உ ரைத்துள்ளார். பெருமிதம்= விர ம். சிறந்த ஆண்மையாய் இது உயர்ந்து திகழ் கிறது. வீரம் உடையவன் விழுமியனப் விளங்கி வருகின்ருன். வீரப் புகழ். எவ்வழியும் செவ்வையாய் மேலான நிலைமையில் தலைமை எ ப்தி கிற்றலால் விரம் பெருமிதம் என வந்தது. யாண்டும் கிலை குலையாது கிற்கும் திவ்விய நீர்மையே விர மாம். உள்ளத் திண் மையால் உறுவது ஆகலின் அது தறுகண்மை என நேர்ந்தது. அஞ்சாமை உறுதி ஊக்கம் தைரியம் என்பன உயர்குல நீர்மை களாய் ஒளிமிகுந்து நிற்கின்றன. போரில் நேரும் இடையூறு களுக்கு பாதும் அஞ்சாமல் பாண்டும் நேரில் எறி மூண்டு பொரும் ஆண்டகைமையே விரம் என்னும் சிரிய பேரால் விளங்கி கிற்கின்றது. போராண்மையில் மனிதனது பேராண்மை பெருகியுளது. போர் வீரன் என்னும் பேர் அர சனுக்குச் சிறந்த புகழ் ஆகின்றது. கல்வி கொடை ஞானம் சீலம் முதலியவற்ருல் அடையும் புகழினும் விரத்தால் எ ப்தும் புகழ் எத்துணே அரியது! என்பது போர் என்னும் குறிப்பால் உய்த்துணர்ந்து கொள்ள லாம். பொரு ங் திறம் அமைந்த அவ் அருங் கிறல் என்றும் பெருங்