பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அரண் ஆற்றியது 69 காலையில் கவனித்தது. மறுநாள் காலேயில் எழுந்ததும் நெருங்கிய உறவினர்களு டன் கடந்த சான்கு கோட்டை மதில்களையும் நன்கு சுற்றிப் பார்த்தார். கொத்தளங்களின் அமைதிகளைக் கூர்ந்த நோக்கி ஒர்ந்த ஆராய்ந்தார். வில்லாளிகளும், வல்லயக்காரர்களும், வேல் வீரர்களும் உள்ளே கின்று போர் புரியும் முறைகளைத் தளபதிக ளோடு உளவுகள் நாடி உசாவி நின்ருர். அதன் பின் அரண்மனை க்கு வந்தார். போர் விரர்களைத் தேர்ந்தார். ஆயுகங்களே ஆயத்தம் செய்தார். கம்பு கண்ட கோடாலி கவண் கைவெடி வாள் வேல் வல்லயம் முதலிய எல்லா வகையான படைக் கலன்களிலும் தனித்தனியே நன்கு பயிற்சி பெற்ற குறிகாரர்களைக் கருதிக் தொகுத்தார். பல ஊர்களிலுமுள்ள படை வீரர்கள் யாவரும் உடனே வரும் படி உத்தரவுகள் அனுப்பி உறுதி சாடி யிருந்தார். காட்டமெல்லாம் பகைவருடைய ஈட்டங்களிலும் போர் வேட் டங்களிலுமே பொங்கி கின்றன. தெவ்வரை எவ்வழியும் வென்று தொலைக்க வேண்டும் என்று விறு கொண்டு கின்ருர், அவ் வெற்றி கிலேக்கு உற்ற துணையாக உரிய பதியை அரிய நிலையில் ஆக்கி வந்தார். கருத்தெல்லாம் போரையே குறித்து நின்றன. சண்டிய திறலே டென்றும் எழில்மிகுந் துள்ள எங்கள் பாண்டிய நாட்டை காங்கள் பண்புடன் திே யோங்க ஆண்டினி திருந்தோம் யாண்டோ அயலிட மிருந்து வந்த ஆண்டிகள் புகுந்து மேலே ஆண்டிட மூண்டார் அம்மா (1 கும்பினித் துரைகள் சேர்ந்து கொடும்படை கூட்டி நீண்டு வமபினி விளேக்க நேரின் வந்தவர் திரளே எல்லாம் அம்புவிக் கிரைகள் ஆக்கி ஆருயிர்க் கவதி போக்கி வெம்புலி மடங்கல் என்ன வென்றுவிற் றிருப்ப னன்றே. (2 త్రొT RT இன்னவாறு இங்கம்பி தன் தம்பி தமர்களோடு உறுதி மொழிகள் கூறிப் பொரு திறல்களைப் பேணிக் கருதிய கருமங் களில் கண்ணுான்றி கின்ருர் கோட்டையைப் புதுக்கிப் படை வலிகளைப் பெருக்கி இடைவெளிகளில் சேரும் கடைகளையெல் லாம் ஆராய்ந்து பகை வரவை எதிர்நோக்கித் தகவுடன் இருக் தார். போரை காடி இவர் இருந்த இருப்பு விர கம்பீரமாய் விளங்கி கின்றது. ஊரை எழில் பெறத் திருத்திச் சீர்கள் பல செப்தருளினர். எவ்வழியும் யாவும் செவ்வையாக் கவனித்தார்.